schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவரான இவர் சிறுவயதில் பேசிய காணொளி என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”அன்று இந்த அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று சன் டிவியும் சரி, திமுக கொத்தடிமைகளும் சரி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!!” என்பதாக இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
அண்ணாமலை சிறுவயதில் சன் டிவியில் பேசிய காணொளி என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் “OnlySuperStar.com” என்கிற வாட்டர்மார்க்கும், சன் டிவியில் அந்த வீடியோ ஒளிப்பரப்பாகியிருந்ததற்கான லோகோவும் இடம் பெற்றிருந்ததாலும் அதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றிருந்ததாலும் குறிப்பிட்ட வலைத்தளத்தில் முதலில் ஆராய்ந்தோம்.
அப்போது, OnlySuperStar.com இணையப்பக்கத்தில் ”சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!” என்கிற தலைப்பில் கடந்த மார்ச் 07, 2011 அன்று பதிவிடப்பட்டிருந்த கட்டுரை நமக்குக் கிடைத்தது.
தொடர்ந்து, படையப்பா வெற்றி விழா தொடர்பான கீ-வேர்டுகளைக் கொண்டு கூகுளில் தேடியபோது ”Padayappa Silver Jubilee Manigandan’s speech” என்கிற தலைப்புடன் பேச்சாளர் மணிகண்டனின் முழு வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவும், அண்ணாமலை பெயரில் வைரலாகும் வீடியோ க்ளிப்பும் ஒன்றே என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நம் தேடலில் தொடர்ந்து, குறிப்பிட்ட படையப்பா வெற்றி விழா வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இளைஞர் மணிகண்டன், இன்றைய பெருமாள் மணி என்பதும் அவர் தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் பிரபல பேச்சாளராக இருப்பதும் தெரிய வந்தது. அவர் பிரபல இயக்குனர் விசு சன் டிவியில் நடத்திய அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய உரையில் ஈர்க்கப்பட்டு அவரை படையப்பா வெற்றி விழா மேடையில் கெளரவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆராய்ந்தபோது கடந்த டிசம்பர் 12, 2021 அன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அப்பதிவில் தனது அரட்டை அரங்க பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் படையப்பா என்று வெளியிட்டிருந்த 1999 ஆம் ஆண்டு பாராட்டு பத்திரிக்கைச் செய்தியையும் பெருமாள் மணி இணைத்துள்ளார்.
Also Read: கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
அண்ணாமலை சிறுவயதில் சன் டிவியில் பேசிய காணொளி என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானது; அவர் பேச்சாளர் பெருமாள் மணி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Article From, OnlySuperStar.com, Dated March 07, 2011
Twitter Post From, Ariyakulam Perumal Mani, Dated December 12, 2021
Twitter Reply From, R.Raja Gopal, Dated July 30, 2020
YouTube Video From, Naveen Kumar, Dated March 06, 2011
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
|