Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
யூடியூபர் மாரிதாஸ் ஊடகவியலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது அவதூறு பரப்பியதால், அவர் 1.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றார். கூடவே தமிழக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் திமுகவின் கட்டுப்பாட்டில் இருப்பாதாகவும் பேசி வருகின்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சி இவர் மீது வழக்கு ஒன்று தொடுத்தது.
அதில்,
“நியூஸ் 18 தொலைக்காட்சியின் சுதந்திரமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் திட்டமிட்டே ஆதாரமற்ற வீடியோக்களை தயாரித்து மாரிதாஸ் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக குணசேகரன் மற்றும் ஜீவசகாப்தன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு வீடியோக்களை மாரிதாஸ் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளார்.
நியூஸ்18 தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் சீர்குலைக்கும் விதமாக மாரிதாஸ் செயல்பட்டதால் அதற்கு நஷ்ட ஈடாக மாரிதாஸ் 1.5 கோடி ரூபாய் தர வேண்டும்.”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுக்குறித்த செய்தி ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் அப்போது வெளிவந்திருந்தது.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு மாரிதாஸுக்கு உயர்நீதிமன்றம் 1.5 கோடி அபராதமிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது.
Archive Link:https://archive.vn/YvZ77
Archive Link: https://archive.vn/gXpM9
Archive Link:https://archive.vn/EcG6L
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதுபோல் மாரிதாஸுக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கும் இடையிலான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் இவ்வழக்கின் நிலை குறித்து தேடினோம்.
அவ்வாறு தேடியதில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் மாரிதாஸ் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இடையிலான அவதூறு வழக்கு விசாரணை நிலையிலேயே உள்ளது. இன்னும் இவ்வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை.
கடைசியாக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவ்வழக்கு நீதிபதியின் பார்வைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் சமரசமாக செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் குணசேகரன் அவர்களோ இவ்வழக்கில் தான் சமரசமாக செல்லப்போவதில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி பார்க்கையில் மாரிதாஸுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறான ஒன்று என்பதும், இவ்வழக்கு இன்னும் விசாரனை நிலையிலேயே உள்ளது என்பதும் நமக்கு உறுதியாகின்றது.
ஊடகவியலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது அவதூறு பரப்பியதால், யூடியூபர் மாரிதாஸ் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 1.5 கோடி விதித்தாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
One India: https://tamil.oneindia.com/news/chennai/high-court-order-to-youtuber-maridhas-remove-defamatory-videos-392773.html
High Court Of Madras: https://hcservices.ecourts.gov.in/hcservices/main.php
Mr.Gunasekaran: https://twitter.com/GunasekaranMu/status/1367725405445050368
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 10, 2023
Vijayalakshmi Balasubramaniyan
July 29, 2021
Vijayalakshmi Balasubramaniyan
December 14, 2021