About: http://data.cimple.eu/claim-review/1352f43cba2ab221c22eeeddcbe45a901d2f9763a63f850a05368f21     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: அமித்ஷா கால்களில் விழுந்த கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. “யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவது மட்டும் தான் தவறு. மற்றபடி” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்! அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் புகைப்படம் பற்றிய உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த சில வருடங்களாகவே அப்புகைப்படம் பரவி வருகிறது என்பது நமக்குத் தெரிய வந்தது. கடந்த மார்ச் 19, 2019 அன்று Time OF India வெளியிட்டிருந்த “Manoeuvres by Amit Shah, Nitin Gadkari helped BJP retain power in Goa” என்னும் கட்டுரையில் அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி ஒன்றாக அமர்ந்து உரையாடும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதே போன்று, “Stalin greets Kanimozhi” என்று கடந்த 2015 ஆம் ஆண்டு கனிமொழி எம்பி, தனது சகோதரர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெறுகின்ற புகைப்படம் Hinduவில் வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட இரண்டு புகைப்படங்களையும் எடிட் செய்து கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் அமித்ஷா கால்களில் விழுந்து பணிவதாக புகைப்படத்தினை போலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்! அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources News Report From, Times Of India, Dated March 19, 2019 News Reporter From, The Hindu, Dated January 06, 2015 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy February 8, 2025 Ramkumar Kaliamurthy February 6, 2025 Vijayalakshmi Balasubramaniyan February 5, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software