schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: மகாபாரதம் 10 திரைப்படங்களாக வெளிவரும் – இயக்குனர் ராஜமெளலி தகவல்
Fact: வைரலாகும் செய்தி தவறான புரிதலில் பரவி வருகிறது.
மகாபாரதம் 10 திரைப்படங்களாக விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் ராஜமெளலி தகவல் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
” சும்மா மெரட்ட போறாப்ள…. இனி கதறல் சத்தம் காதை கிழிக்கும். திரைப்பட உலகின் ராஜகுரு டைரக்டர் ராஜமௌலி சார்… தலை வணங்குகிறேன்” என்றும், “இவரு ஒரு படம் எடுத்தாவே இங்க சில பேரு கதறு கதறுன்னு கதறுவானுங்க. இப்ப மகாபாரதம் பத்து பாகங்களாக….. வேற லெவலா தெறிக்க விட போறாரு….. நன்றி தல” என்பதாகவும் பலரும் இச்செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இஸ்லாமியப் பெண் நேர்மறை விமர்சனம் எனப் பரவும் சன்னி லியோன் பட விமர்சன வீடியோ!
மகாபாரதம் 10 திரைப்படங்களாக வெளிவரும் என்று இயக்குனர் ராஜமெளலி உறுதியாக அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சமீபத்தில் Dr Guravareddy Annapareddy நடத்திய சந்திப்பில் “Bones to Blockbusters – An Exclusive Latest Interview With SS Rajmouli By Dr. A.V Guruva Reddy” என்கிற தலைப்பில் இயக்குனர் ராஜமெளலியின் நேர்காணல் வெளியாகியிருந்தது.
அதில், இயக்குனர் ராஜமெளலியிடம் கேள்வி எழுப்பிய சஞ்சய் என்கிற மருத்துவர், “நீங்கள் மகாபாரதக் கதையை திரைப்படமாக்க விரும்புகிறீர்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மகாபாரதம் ஒரு சிறந்த மிகப்பெரிய காவியம். டிவியில் காணும் எபிசோட்கள் 266 வரை உள்ளன. எனில், ஊடகங்கள் நீங்கள் எடுக்க விரும்புவதாகச் சொல்லும் மகாபாரதத்தை திரைப்படமாக எடுத்தால் எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ராஜமெளலி, “எனக்குத் தெரியவில்லை சார். அது மிகவும் கடினமான கேள்வி. ஆனால், ஒருவேளை நான் மகாபாரதத்தை படமாக்க முடிவெடுத்தால் நாடு முழுவதும் உள்ள மகாபாரதக்கதைகளின் வடிவங்களைப் படித்து முடிக்கவே எனக்கு ஒன்று முதல் அதற்கு மேலான வருடங்கள் ஆகலாம். தற்போது என்னால் உறுதியாக கூறமுடியாது. ஒருவேளை அது 10 பாகங்களாக வெளிவரலாம். நான் அனுமானமாக நினைக்கிறேன்; ஆனால் உறுதியாகத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து GuruvaReddy, “மகாபாரதம் உங்களுடைய திட்டங்களில் இடம்பெற்றிருக்கிறதா? அல்லது ஊடகங்களுக்காக சொல்லப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியபோது “அது என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “என்னுடைய ஒவ்வொரு அடியும் மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பதை நோக்கியே செல்கிறது. என்னுடைய கனவு அது” என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையே, “மகாபாரதம் 10 பாகங்களாக வரும். ராஜமெளலி தகவல்” என்ற தலைப்புடன் தினதந்தி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அதை உறுதியான தகவல் என்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!
மகாபாரதம் 10 திரைப்படங்களாக விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் ராஜமெளலி உறுதியாக அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது; எதிர்காலத்தில் மகாபாரதத்தை இயக்கினால் அது ஒருவேளை 10 படங்களாக வெளிவரலாம் என்று மகாபாரதம் திரைப்படம் பற்றிய கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதிலே தவறான புரிதலுடன் பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube video from, Dr Guravareddy Annapareddy, Dated March 08, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|