schema:text
| - Fact Check
மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினாரா எம்.பி சு.வெங்கடேசன்? உண்மை என்ன?
மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“அன்று-மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை. சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடை விதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்றும் அழிந்துவிடாது.
இன்று-ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும். தேர்வு தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர், சிபிஎஸ்சி இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்” என்பதாக இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமுரசு!
Fact Check / Verification
மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் தற்போது பேசியதாக வெளியிடப்பட்டிருக்கும் பகுதி உண்மையானது; ஆனால், அச்செய்தி கடந்த பிப்ரவரி 2021ஆம் ஆண்டு வெளியான செய்தி இது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து, மதுரை சித்திரை திருவிழாவை தேர்தலை முன்னிட்டு சு.வெங்கடேசன் எம்.பி தள்ளி வைக்கக் கூறியதாக பரவும் தகவல் குறித்து கீ-வேர்டுகள் மூலமாகத் தேடியபோது கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலில் Ping Chandru என்பவர் இச்செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நிலையில் அதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்களுடைய வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது தேவையில்லாமல் அவதூறு பரப்பி வருவதாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து CPIM Tamil Nadu அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக விளக்கமளித்துள்ளனர்.
மேலும், கடந்த ஏப்ரல் 2020ல் எம்.பி சு.வெங்கடேசன் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதாக அவதூறு பரவிய நிலையில் சித்திரை திருவிழாவை ரத்து செய்யவேண்டும்; திருக்கல்யாணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தான் கூறியதாகப் பரவுகின்ற செய்திகள் உண்மைக்கு மாறாக பரவுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read: கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!
Conclusion
மதுரையில் சித்திரை திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாகப் பரவுகின்ற செய்தி போலியானது; கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Twitter Post From, Puthiyathalaimurai, Dated January February 06, 2021
Facebook Post From, CPIM Tamil Nadu, Dated March 2019
Twitter Post From, Su.Venkatesan, Dated April 19, 2020
CPIM Tamil Nadu
Article From, Dinamani, Dated March 23, 2019
Article From, Tamil Samayam, Dated March 23, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|