schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த கூலி தொழிலாளியின் மகள் ரேவதி
Fact: IAS அதிகாரியாக ரேவதி தேர்வாகவில்லை, காவல்துறையில் உதவி ஆய்வாளராக தேர்வானார்
“IAS தேர்வில் மூன்றாவது இடம்… ஓலை குடிசையில் பிறந்து கூலி தொழிலாளியின் மகளாய் வளர்ந்து IAS தேர்வில் மூன்றாம் இடம் பிடித்த ரேவதி” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் இனிப்பு ஊட்டுவதாய் இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!
IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த கூலி தொழிலாளியின் மகள் ரேவதி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் இத்தகவல் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை கண்டறிய முடிந்தது.
ஆகவே 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த 2016 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் வெற்றியாளர்கள் பட்டியலை ஆராய்ந்தோம். இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோபால கிருஷ்ண ரோணங்கி என்பரின் பெயர் இருந்ததேயொழிய, ரேவதி எனும் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் படம் குறித்த உண்மையை தேடினோம். இத்தேடலில் அப்படத்தில் இருப்பவர் பெயர் ரேவதி என்பதும், இவர் ஆந்திரப் பிரதேச உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்வானவர் என்பதும் தெரிய வந்தது.
ரேவதி பயின்ற சிவாஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் போலீஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரேவதி குறித்து பத்திரிக்கை செய்தியையும், அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் பதிவாக பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச காவல் துறையை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு ரேவதி குறித்து விசாரித்தோம். அவர்கள் ரேவதியிடம் நம்மை தொடர்புப்படுத்தினர்.
இதனையடுத்து ரேவதியை விசாரிக்கையில், அவர் தன் முழுப்பெயர் மதி வெங்கட ரேவதி என்றும், வைரலாகும் படம் ஆந்திரப்பிரதேசத்தின் ஆவனிகுட்டா மாவட்டத்தில் உள்ள மோடுமுடி கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றும், அவர் தற்போது ராஜமுந்திரியில் உள்ள திஷா காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிகின்றார் என்றும் தெரிவித்தார்.
கடைசியாக, அவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
Also Read: Fact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?
IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த கூலி தொழிலாளியின் மகள் ரேவதி என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
UPSC 2016 Results
Facebook post from SivajiInstituteOfPolice, Dated March 28, 2017
Facebook post from SivajiInstituteOfPolice, Dated March 29, 2017
Phone Conversation with Mathi Venkata Revathi, Sub Inspector of Police
(இந்த தகவலானது கடந்த 2020 ஆண்டிலேயே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஆய்வு செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|