About: http://data.cimple.eu/claim-review/230a05a04e08fd29b32f803743768b8d96e0c2291c94c70118973377     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Politics திமுக ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மேடைக்கு கீழே உட்கார வைக்கப்பட்டார் என்று தினமலர் நாளிதழில் செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தியூர் செல்வராஜ் அவர்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவர் மேடைக்கு கீழே அமர்த்தப்பட்டார் என்று கூறி சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். நடிகை, நடனப் பயிற்சியாளர் மற்றும் பாஜகவின் கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவராக விளங்கும் காயத்ரி ஜெயராம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். Archive Link:https://archive.vn/m3pS5 பாஜகவின் பேச்சாளரான எஸ்.ஜி. சூர்யா அவர்களும் இந்நிகழ்வை கண்டித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். Archive Link:https://archive.vn/5bGTF இதைத் தவிர்த்து மேலும் பலரும் திமுகவையும், ஸ்டாலின் அவர்களையும் சாடி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். Archive Link: https://archive.vn/ppHvJ Archive Link:https://archive.vn/dWqn6 சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ள இத்தகவலின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள் (22/02/2021) அன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் அவர்கள் கீழே அமர வைக்கப்பட்டார் என்று தினமலரில் செய்தி ஒன்று வந்தது. இச்செய்தியின் அடிப்படையிலேயே அந்தியூர் செல்வராஜ் அவர்களை சாதி ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. ஆகவே தினமலரில் வந்த செய்தியை முதலில் ஆய்வுக்குட்படுத்தினோம். தினமலரில் வந்த இச்செய்தியில், “அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு, துணை பொதுச் செயலர், ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்துள்ளோம், என்பதை தெரிவிக்கும் விதமாக, அந்தியூர் செல்வராஜ் அவர்களை மேடையின் கீழ் திமுகவினர் அமர வைத்தனர்” என குறிப்பிடப்பட்டிருந்தை நம்மால் காண முடிந்தது. இந்த கூற்று உண்மைதானா என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம். நம் தேடலில் ஈரோட்டில் நடந்த இந்நிகழ்வின் மொத்த தொகுப்பு வீடியோ ஒன்றை காண முடிந்தது. அவ்வீடியோவை உற்று நோக்கியதில் தினமலரில் குறிப்பிட்ட கூற்றை ஸ்டாலின் அவர்களோ அல்லது மற்றவர்களோ எந்த ஒரு இடத்திலும் பேசவே இல்லை என்பதை நம்மால் அறிய முடிந்தது. அவ்வீடியோவைக் காண: https://www.pscp.tv/w/1mrxmwenmqVGy?t=18 இதன்படி பார்க்கையில் தினமலரின் இக்கூற்று தவறான ஒன்று என்பது தெளிவாகின்றது. இதன்பின் தினமலர் வெளியிட்ட புகைப்படத்தை உற்று நோக்கியதில் அப்புகைப்படம் விழா தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒன்று என்பதை நம்மால் உணர முடிந்தது. ஏனெனில் அப்புகைப்படத்தில் விழா மேடையே வெறிச்சோடி போய் காணப்படுகின்றது. இருக்கைகள் ஏதுமின்றி, விழாவுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதை நம்மால் காண முடிகின்றது. இதுக்குறித்து தெளிவான ஒரு விளக்கம் பெற அந்தியூர் செல்வராஜ் அவர்களை நியூஸ்செக்கர் சார்பில் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு பேசினோம். “தினமலரில் வந்த செய்தி முற்றிலும் பொய்யானது. விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா நடந்த இடத்திற்கு சென்று விட்டேன். அசதி காரணமாக நான் மேடையின் கீழே இருக்கை போட்டு அமர்ந்திருந்தேன். அதை படம்பிடித்தே இவ்வாறு ஒரு செய்தி பரப்பப்படுகின்றது. இதற்கு முன்பு கிருஷ்ணகிரியில் விழா நடந்தபோது தலைவருக்கு பக்கத்தில் அவருக்கு சமமாகவே அமர்ந்திருந்தேன். இது வேண்டுமென்றே தவறாகத் திரித்து எழுதப்பட்ட செய்தி. நான் இதுப்போன்று பல விஷயங்களைக் கடந்தே இந்நிலைக்கு வந்துள்ளேன்.” என்று அந்தியூர் செல்வராஜ் தெரிவித்தார். அந்தியூர் செல்வராஜ் அவர்கள் மேடைக்கு கீழே உட்கார வைக்கப்பட்டார் என்று தினமலர் நாளிதழில் வந்தச் செய்தி தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Gayathri Jayaram: https://twitter.com/BJP_Gayathri_R/status/1364101590898987012 SG Surya: https://twitter.com/SuryahSG/status/1364101099976675331 Anthiyur P.Selvaraj:- (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy February 8, 2025 Ramkumar Kaliamurthy February 6, 2025 Vijayalakshmi Balasubramaniyan February 5, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software