About: http://data.cimple.eu/claim-review/24455c699f55dd61cc79bcd85fceb5fd882c1810b8ed65e6a43b867b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மூன்று தலையுடைய யானை காணப்பட்டதாக பரவும் வீடியோ. Fact: வைரலாகும் வீடியோவுக்கும் பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கும் தொடர்பில்லை. இவ்வீடியோ தாய்லாந்து நாட்டில் உள்ள அயூத்தயா நகரில் நடந்த பேரணியில் எடுக்கப்பட்டதாகும். அதேபோல் வீடியோவில் காணப்படும் யானைக்கு உண்மையாக ஒரு தலை மட்டுமே இருந்தது. மற்ற இரண்டு தலைகளும் பொம்மை தலைகளாகும். பிரயாக்ராஜில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 13, 2025) கும்ப மேளா தொடங்கிய நிலையில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் காணப்பட்ட மூன்று தலை கஜராஜ்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதல்வர் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மூன்று தலையுடைய யானை காணப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். அதில் தாய்லாந்தில் உள்ள ஆயுத்தயா நகரத்தில் நடந்த ஐந்தாவது க்ருங் ஸ்ரீ கோன் விழாவில் மூன்று தலையுடைய யானை பேரணி நடந்ததாக கூறி ‘Everything is delightful’ எனும் யூடியூப் பக்கத்தில் மே 31, 2024 அன்று வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் உண்மையான யானை தலையின் இரு புறங்களிலும் பொம்மை தலைகளை கட்டியிருப்பதை காண முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் தாய் PBS எனும் தாய்லாந்து ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆயுத்தயா க்ருங் ஸ்ரீ கோன் விழா குறித்து செய்தி வீடியோவுடன் ஜூன் 02, 2024 அன்று வெளியிடப்பட்டிருந்தை காண முடிந்தது. அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் மூன்று தலையுடைய யானை இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதனையடுத்து தேடுகையில் ஆயுத்தயா நகரத்தின் செய்தி தொடர்புத்துறை இவ்விழா குறித்து மே 31, 2024 அன்று செய்தி அறிக்கை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த அறிக்கையில் இவ்விழா மே 31, 2024 அன்று தொடங்கி ஜூன் 03, 2024 வரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலும் அந்த யானை படம் இடம்பெற்றிருந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகும் வீடியோவுக்கும் பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என உறுதியாகின்றது. Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிச்சைக்காரராக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதா கலைஞர் நியூஸ்? Conclusion பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மூன்று தலையுடைய யானை காணப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ சென்ற வருடம் தாய்லாந்து நாட்டில் நடந்த விழா ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். அதேபோல் வீடியோவில் இருக்கும் யானைக்கு ஒரு தலை மட்டுமே இருந்தது. மற்ற இரண்டு தலைகளும் பொம்மை தலைகளாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Facebook video from, Everything is Delightful, Dated May 31, 2024 Report from Thai PBS, Dated June 02, 2024 Press Release from Ayutthaya Public Relation Department, Dated May 31, 2024 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software