About: http://data.cimple.eu/claim-review/2a5a812aec82ce4cb3348ffd8b53efbef0b874286ef5503642c08211     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம். Fact: இத்தகவல் தவறானதாகும். அனுமதி அட்டை உள்ளவர்களே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவர். வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறையும் மறுத்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று மாலை சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூலை வெளியிடவிருக்கின்றார். இந்நூலானது விகடன் பிரசுரத்தால் அச்சிடப்பட்டு வெளிவரவிருக்கின்றது. ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ எனும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இந்நிலையில், “நாளை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடிகர் தவெக தலைவர் விஜய் வெளியிட்டு முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்ளும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தவெக தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு. அனுமதி இலவசம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்தாரா விஜய்? Fact Check/Verification அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம் என்று தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம். முன்னதாக விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர், “இத்தகவல் தவறானது. அனுமதி அட்டை அல்லது அழைப்பிதழ் உள்ளவர்களே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார். இதனையடுத்து தேடியதில் இந்நிகழ்வில் நூல் உருவாக்கவுரை ஆற்றவிருப்பவரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜூன் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள் குறித்து அறிவிக்க இந்நிகழ்ச்சியின் அழைப்பிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. இந்த அழைப்பிதழின் இறுதியில் “நுழைவு அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி” என்று எழுதப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. மேலே கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது. இந்த தவறான தகவலை புதிய தலைமுறை வெளியிட்டதா என உறுதி செய்ய அந்நிறுவனத்தில் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை; மாறாக வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது. Also Read: EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா? Conclusion அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசம் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவர். இச்செய்தியை தாங்கி வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறையும் மறுத்துள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Phone Conversation with Britto, Editor, Vikatan X post from Aadhav Arjuna, Founder, Voice of Commons, December 03, 2024 Facebook post from Puthiya Thalaimurai, December 05, 2024 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software