About: http://data.cimple.eu/claim-review/2be110f111fd74c3c8d9c913c8f3dd27470189b805eb6367d2c5a754     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Claim: கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். சீனாவில் ஓடும் ரயிலின் வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. இத்திட்டத்தின் முதல் பகுதி 2026 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் முடிவடையும் என்று உத்தர்காண்ட் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகாண்டிலுள்ள கர்ணபிரயாக்குக்கு ரயில் சேவை துவங்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்கில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: கும்பமேளாவில் சாமியார் வேடத்தில் புகுந்த இஸ்லாமியர்; வைரலாகும் படம் உண்மையானதா? Fact Check/Verification கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவானது இரண்டு வீடியோக்களை இணைத்து உருவாக்கப்பட்டிருந்தால், முன்னதாக அவ்விரு வீடியோக்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்தோம். இதனையடுத்து வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் பியூப்பிள் டெய்லி, சைனா எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே போன்று வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் இவ்வீடியோவானது சீனாவின் சிலி பகுதியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வைரலாகும் வீடியோவையும் பியூப்பிள் டெய்லி வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு வீடியோக்களும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதியானது. இதனையடுத்து தேடியதில் Xi’s Moments எனும் சீன அரசின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இதே இடத்தில் (சீனாவின் சிலி பகுதியில்) எடுக்கப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. வேறு சில சமூக ஊடக பதிவுகளிலும் இதே இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதனையடுத்து கூகுள் எர்த்தை பயன்படுத்தி தேடுகையில் வைரலாகும் வீடியோ சீனாவில்தான் எடுக்கப்பட்டது என உறுதியானது. தொடர்ந்து கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து திட்டம் குறித்து தேடுகையில், 2026 ஆம் ஆண்டின் முடிவில் இத்திட்டத்தின் முதல் பகுதி முடிவடையும் என்று உத்திரகாண்டின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அண்மையில் பேசி இருப்பதை காண முடிந்தது. Also Read: கும்பமேளாவில் ரகசியமாக இரவில் நீராடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா? Conclusion கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். சீனாவின் சிலி பகுதியில் ஓடும் ரயிலின் வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. இத்திட்டத்தின் முதல் பகுதியே அடுத்த ஆண்டின் முடிவில்தான் முடிவடையும் என்று உத்திரகாண்டின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அண்மையில் கூறியுள்ளார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது) Result: False Our Sources Facebook Post By People’s Daily, China, Dated October 16, 2024 Facebook Post By Xi’s Moments, Dated October 31, 2024 Google Earth Website உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software