About: http://data.cimple.eu/claim-review/3fa3d016f5521181a0ead1328372b623e5a50f0d69044910af6a0fe4     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim : KGF ராக்கி, STR உதவியுடன் ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்ற அண்ணாமலை Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் சன்நியூஸ் வெளியிட்டது அல்ல. Bun News என்கிற பெயரில் பரவும் நையாண்டி பதிவு இது. KGF ராக்கி பாய், பத்து தல STR உதவியுடன் ஹெலிகாப்டரில் கோலார் தங்கத்தைப் பணமாக மாற்றி எடுத்துச் சென்ற அண்ணாமலை என்று நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது. “KGF-ல் உள்ள தங்கத்தை கர்நாடகத்தில் வைத்து பணமாக மாற்றி ராக்கி பாய் மற்றும் பத்து தல STR-இன் உதவியுடன் ஹெலிகாப்டரில் கொண்டு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இந்த நியூஸ்கார்ட் Bun News என்கிற பெயரில் பரவுகிறது. இந்நிலையில், சன்நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதாக பாஜகவினர் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: Factcheck: பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? KGF ராக்கி பாய், பத்து தல STR உதவியுடன் ஹெலிகாப்டரில் கோலார் தங்கத்தைப் பணமாக மாற்றி எடுத்துச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் நியூஸ்கார்டில் உண்மையில் “Bun News” என்றே இடம்பெற்றுள்ளது. சன் நியூஸ் நிறுவன நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டில் லோகோ, செய்தி, புகைப்படம் என எல்லாவற்றையும் எடிட் செய்து இந்த நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்டில் சன் நியூஸ் நிறுவன டெம்ப்ளேட் உபயோகிக்கப்பட்டிருந்ததால் இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்டில் எங்களுடைய டெம்ப்ளேட் போலியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்ட் எங்களுடையது அல்ல; போலியாக உருவாக்கப்பட்டது” என்று விளக்கமளித்தார். அண்ணாமலை ஹெலிகாப்டரில் கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு சென்றதைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் கட்டுகட்டாக பணம் எடுத்துச்சென்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தரப்பில் அவருடைய ஹெலிகாப்டரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் எதுவும் எடுத்து வரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியைத் தொடர்ந்தே இந்த நையாண்டி நியூஸ்கார்ட் வைரலாகி வருகிறது. Also Read: வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்! KGF ராக்கி பாய், பத்து தல STR உதவியுடன் ஹெலிகாப்டரில் கோலார் தங்கத்தைப் பணமாக மாற்றி எடுத்துச் சென்ற அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் டெம்ப்ளேட்டை எடுத்து நையாண்டி செய்யும் வகையில் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Phone Conversation With, Manoj, Sun News Digital, Dated April 19, 2023 Facebook Post From, Sun News Tamil, Dated April 18, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy December 28, 2024 Ramkumar Kaliamurthy December 27, 2024 Ramkumar Kaliamurthy November 21, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software