About: http://data.cimple.eu/claim-review/410c8f16fdff20ea65daf0437668c748d1c0697347fdb3ae7590d681     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check 140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால், நம் வங்கி கணக்கிலிருக்கும் பணம் முழுவதும் திருடப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Also Read: மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருக்கின்றாரா ரஜினிகாந்த்? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். 140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால், நம் வங்கி கணக்கிலிருக்கும் பணம் முழுவதும் திருடப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதை அறிய முடிந்தது. அச்சமயத்தில், மகாராஷ்டிரா சைபர் துறை காவல்துறையினர் வைரலாகும் வீடியோவில் குறிப்பிடப்படும் தகவல் குறித்து விளக்கி டிவீட் செய்துள்ளனர். அந்த டிவீட்டில், காவலர் ஒருவர் +140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. உண்மையில், +140 என்று தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெடிங் எண்களாகும். இந்த எண்களிலிருந்து வரும் அழைப்புகளை எடுத்து, உங்கள் வங்கி கணக்கு குறித்த ரகசிய தகவல்கள், உங்களின் தனிப்பட்ட விவரங்கள், OTP போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து வீடியோவில் காணப்படும் காவலர் எதற்காக இவ்வாறு ஒரு தகவலை கூறினார் என்பதை குறித்து தெளிவு செய்ய, இதுக்குறித்து மேலும் தேடுகையில் மகாராஷ்டிரா சைபர் போலீசார் பதிவு செய்திருந்த மற்றொரு டிவீட்டை காண முடிந்தது. அந்த டிவீட்டில், சோனி லைவ் சேனல் தங்களது புதிய ஷோவை விளம்பரப்படுத்துவதற்காக இவ்வாறு ஒரு யுக்தியை கையாண்டுள்ளனர. இந்த விளம்பரங்களை உடனே நிறுத்தக்கோரி அவர்களுக்கு போலீசார் ஆணையிட்டுள்ளனர் என்று பதிவு செய்திருந்தனர் சோனி லைவ் நிறுவனம் இந்நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு டிவீட் செய்துள்ளதையும் நம்மால் காண முடிந்தது. மும்பை போலீஸும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ளது. Also Read: WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி! 140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால், நம் வங்கி கணக்கிலிருக்கும் பணம் முழுவதும் திருடப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கும் வீடியோ டிவி ஷோவுக்காக உருவாக்கப்பட்ட புனைவு வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். Sources Sony Live’s tweet Maharashtra Cyber Police’s tweets Mumbai Police’s tweet (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy April 5, 2022 Ramkumar Kaliamurthy March 25, 2022 Ramkumar Kaliamurthy January 10, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software