About: http://data.cimple.eu/claim-review/42a252edcb2d92e645d9c285851418102cf29d743aed1393f8120b60     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: நீதிபதி அருந்தும் நீரில் முஸ்லீம் ஊழியர் எச்சில் துப்பியதாக பரவும் தகவல் Fact: நீதிபதி அருந்தும் நீரில் ஊழியர் எச்சில் துப்பியது உண்மையே. ஆனால் அவர் இஸ்லாமியர் அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவராவார். அவரின் பெயர் விகாஸ் குப்தாவாகும். “உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நீதிபதி அவரின் முஸ்லீம் பியூனிடம் கேட்டபோது, அந்த ஜிஹாதியை தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதில் துப்பினார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தாரா நிதின் கட்கரி? Fact Check/Verification நீதிபதி அருந்தும் நீரில் முஸ்லீம் ஊழியர் எச்சில் துப்பியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் ‘Video: UP man spits in water meant for boss’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மே 29, 2018 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியில் இச்செயலை செய்த ஊழியரின் பெயர் பெயர் விகாஸ் குப்தா என்றும், அவர் சற்று மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடுகையில் ABP Live-வும் இச்சம்பவம் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் அந்த ஊழியரின் பெயர் விகாஸ் குப்தா என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேடுகையில் சமூக ஊடகங்களில் பரவும் இந்த பதிவுகளுக்கு அலிகார் போலீஸ் பதிலளித்திருப்பதைகாண முடிந்தது. அந்த பதிலில், “உண்மை அறியாமல் இந்த தவறான தகவலை பரப்ப வேண்டாம். இந்த சம்பவமானது 2018 ஆம் நடந்தது. அச்சமயத்திலேயே அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா? Conclusion நீதிபதி அருந்தும் நீரில் முஸ்லீம் ஊழியர் எச்சில் துப்பியதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அச்செயலை செய்தவர் இஸ்லாமியர் அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவராவார். அவரின் பெயர் விகாஸ் குப்தாவாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Partly False Our Sources Report from TOI, Dated May 29, 2018 Report from ABP Live, Dated May 28, 2018 X Post from Aligarh Police, Dated July 26, 2024 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software