Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“பிரியாணி ஆண்மை குறைவு ஏற்படுத்தும் என்பது உண்மைதான். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் இதை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். சிறுவயதில் பிரியாணியை தவிர்த்திருந்தால் இன்று என் மனைவியுடன் இருந்திருப்பேன்” என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்டை காணும்போதே, இது அவதூறு பரப்புவதற்காக போலியாக உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. ஏனெனில் பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் தன்னையும் தன் குடும்பத்தையும் சிறுமைப்படுத்தி பேசுவார் என்பது நம்பும்படி இல்லை. இருப்பினும் பலர் இத்தகவலை உண்மை என்று நம்பி மேற்கண்ட நியூஸ்கார்டை பரப்பி வருவதால் இதுகுறித்து தேடினோம்.
கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் கதிர் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பு பதிவையே காண முடிந்தது.
Also Read: பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்றாரா அண்ணாமலை?
பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நம் ஆய்வின் மூலம் தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Source
Kathir News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)