About: http://data.cimple.eu/claim-review/4ead5303a1abd6dcd3f7820c8c573778a03eb96a4df1a327f3560770     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோ. Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் கோயம்புத்தூரில் நடந்ததல்ல; 2023 ஆம் ஆண்டில் சீரடியில் நடந்ததாகும். “நேற்று கோவை சாய்பாபா கோயில்* கேட் 2 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன் கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது. பிறகு காருக்கு உள்ளே உள்ள பேக்கை திருடி செல்கிறான். எச்சரிக்கை பதிவு காரில் *விலையுயர்ந்த பொருட்களை வைத்துவிட்டு செல்லாதீர்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: கும்பமேளாவிற்கு வந்த சாமியார்களுடன் அமித்ஷா சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா? Fact Check/Verification கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் மும்பை நியூஸ் எனும் எக்ஸ் பக்கத்தில் செப்டம்பர் 29, 2023 அன்று வைரலாகும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வீடியோவில் காணப்படும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடுகையில் ஜூ நியூஸின் மராத்தி பதிப்பான ஜீ 24 தாஸ் யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 01, 2023 அன்று வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் சீரடியில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இச்சம்பவம் குறித்து அக்டோபர் 01, 2023 அன்று செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் அகமதுநகர் உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீப் மிட்கே சீரடியில் நடந்த இச்சம்பவம் விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. “வீடியோவில் காணப்படும் திருட்டு குறித்து எவ்வித புகார் வரவில்லை என்றாலும் இதுக்குறித்து நாங்கள் விசாரித்து வருகின்றோம். வீடியோவில் காணப்படும் திருடன் பார்ப்பதற்கு வேறு மாநிலத்தை சேர்ந்தவன்போல் உள்ளான். சிசிடிவி உதவியிடன் அத்திருடனை கண்டிப்பாக தேடி பிடிப்போம். அப்போதுதான் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சீரடியில் மறுபடியும் நடக்காமல் இருக்கும்” என்று மிட்கே கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Also Read: கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதா? Conclusion கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். அச்சம்பவமானது கோயம்புத்தூரில் அண்மையில் நடந்ததல்ல; 2023 ஆம் ஆண்டில் சீரடியில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Partly False Our Sources X post By Mumbai News, Dated September 29, 2023 Report by Zee 24 Taas, Dated October 01, 2023 Report by TOI, Dated October 01, 2023 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software