Fact Check
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவும் போலி புகைப்படத்தகவல்!
Claim: பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்ச ரூபாய் சம்பளம்.
Fact: வைரல் புகைப்படத்தில் உள்ளவர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவர்.
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“நரேந்திர மோடி பிரதமராக இருந்து நாட்டை நிர்வகிக்க நம் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மாத சம்பளம் ரூ.1.6 லட்சம். மக்கள் வரிப்பணத்தில் மேக்கப் போடும் பெண்ணிற்கு மோடி கொடுக்கும் மாத சம்பளம் ரூ.15 லட்சம்” என்பதாக இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டதாக பரவும் 2016 ஆம் ஆண்டு படம்!
Factcheck / Verification
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற நிலையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உள்ளே அமைந்திருக்கும் புகைப்படத்திலேயே மோடியின் மேக்கப் பெண்மணிக்கு 15 லட்சம் சம்பளம் என்கிற செய்தி உண்மையில்லை என்றே இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் இடம்பெற்றிருக்கும் பெண் குறித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது அவர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியின் சிலையை அமைக்க அவரது அளவுகளை எடுக்கும் பெண் என்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு புகழ்பெற்ற Madame Tussauds wax museum-ஐ சேர்ந்த கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பிரதமரின் உருவ அளவீடுகளை அவருடைய மெழுகுச்சிலைக்காக பெற்றுச் சென்றனர். குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் பிரதமரின் கண் அளவீட்டை மேற்கொள்ளும்போது அந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேடம் டுசாட்ஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் இதுகுறித்த வீடியோவிலும் அப்பெண் பிரதமரின் கண் அளவீட்டை மேற்கொள்வதை நம்மால் காண முடியும்.
கடந்த ஏப்ரல் 28, 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் மெழுகுச்சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியங்களில் நிறுவப்பட்டது குறித்த செய்தி மேடம் டுசாட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
Conclusion
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Article Link from Madame Tussauds, Dated April 28, 2016
YouTube Video from Madame Tussauds
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)