About: http://data.cimple.eu/claim-review/595e17f16497edd11a3df136577a5f6276f8cc50928f4aad1da382cc     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா? 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. உத்திர பிரதேசத்தை சார்ந்த நூர்ஜஹான் என்பவர் ஒரே நேரத்தில் 15 தலைவர்களின் படங்களை வரைந்ததாக கூறி தகவல் ஒன்று ஊடகங்களில் வந்தது. இதனைத் தொடர்ந்து இப்பெண்ணின் பெயர் கின்னஸ் புத்தககத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதா? Fact Check/Verification 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். முன்னதாக கின்னஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் “நூர்ஜஹான்”, “sketching” (ஸ்கெட்சிங்) போன்ற கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடினோம். இதில் நமக்கு எந்த வித தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து “Art and Craft” (ஆர்ட்ஸ் மற்றும் கிராஃப்ட்) பிரிவில் நூர்ஜஹான் பெயர் இடம்பெற்றுள்ளதா என் தேடினோம். அதிலும் நூர்ஜஹான் குறித்து எந்த வித தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து நூர்ஜஹானின் சமூக ஊடகப்பக்கங்களான ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் கின்னஸ் சாதனை புரிந்ததாக ஏதேனும் பதிவுகள் உள்ளதா என தேடினோம். அதில் அவ்வாறு எந்த பதிவும் காணப்படவில்லை. இதனையடுத்து தேடியதில் நூர்ஜஹானின் யூடியூப் பக்கத்தில் கடந்த வியாழனன்று (அக்டோபர் 27) வைரலாகும் வீடியோ பதிவேற்றப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த வீடியோவில் நூர்ஜான் அவரின் வரைதல் ஆர்வம் குறித்தும், அது மூலமாக தேசத்திற்கு ஏதாவது செய்ய விரும்பியது குறித்தும் பேசி இருந்தார். ஆனால் இதில் எவ்விடத்திலும் கின்னஸ் சாதனை புரிந்ததாக குறிப்பிட்டிருக்கவில்லை. இதனையடுத்து நியூஸ்செக்கர் சார்பில் நூர்ஜஹானை தொடர்புக் கொண்டு, அவரின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா என விசாரித்தோம். அதற்கு, தனது ஆசிரியர் (அஜய் மீனா) மூலம் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், நான் கின்னஸுக்கு விண்ணப்பித்தது உண்மையே, ஆனால் நான் சாதனை புரிந்தவர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தெளிவு செய்தார். Also Read: ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா? Conclusion இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது) Result: Partly False Sources Official Website Of Guinness World Record Telephonic Conversation With Noorjahan on October 27, 2022 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software