schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Sports
Claim: சென்னை அணிக்காக அகமதாபாத்தில் கூடிய ரசிகர்கள்
Fact: வைரலாகும் படங்கள் ஸ்பெயின் மற்றும் எத்தியோப்பியாவில் எடுக்கப்பட்டவையாகும்
குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் அகமதாபாத் அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண இலட்சக்கணக்கான சென்னை அணி ரசிகர்கள் கூடியதாக புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஏசியாநெட் நியூஸ் தமிழ் எனும் இணைய ஊடகமும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல் வாகனத்தில் சிரித்துக் கொண்டே செல்ஃபி என்று பரவும் AI புகைப்படம்!
சென்னை அணிக்காக அகமதாபாத்தில் ரசிகர்கள் கூடியதாக புகைப்படங்கள் சில வைரலானதை தொடர்ந்து, அப்படங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் இரண்டு படங்களும் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டதல்ல, அவை எத்தியோப்பியா மற்றும் ஸ்பெயினில் எடுக்கப்பட்டவை என தெரிய வந்தது.
ஏசியாநெட் நியூஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு படங்களில் இடதுப்புறத்தில் காணப்படும் முதல் படம் எத்தியோப்பியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் “தி கிரேட் எத்தியோப்பியன் ரன்” எனும் நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்வானது கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து எத்தியோப்பியாவில் நடந்து வருகின்றது. ஆனால் வைரலாகும் படம் எந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிய முடியவில்லை. ஆனால் தி கிரேட் எத்தியோப்பியன் ரன் குறித்து CNN வெளியிட்டுள்ள கட்டுரையில் இப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. இக்கட்டுரையானது ஆகஸ்ட் 4, 2017 அன்று வெளியாகியிருந்தது.
CNN தவிர்த்து மேலும் சில ஊடகங்களிலும் எத்தியோப்பியன் ரன் குறித்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்தி இரண்டாவதாக இருக்கும் படம் குறித்து ஆய்வு செய்கையில், EFE Deportes எனும் டிவிட்டர் பக்கத்தில் UD Las Palmas எனும் கால்பந்து அணியை வரவேற்க ஸ்பெயினில் உள்ள கிரான் கெனாரியா பகுதியில் ரசிகர்கள் கூடியதாக கூறி இப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் இரண்டு படங்களுக்கும் ஐபிஎல் தொடருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகின்றது.
Also Read: புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?
சென்னை அணிக்காக அகமதாபாத்தில் ரசிகர்கள் கூடியதாக வைரலாகும் படங்கள் தவறானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from CNN, Dated August 04, 2017
Report from German Road Races, Dated January 01, 2021
Report from mdgfund
Tweet from EFE Deportes, Dated May 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|