schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Entertainment
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
இதனத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சிலர் ரிஷப் ஷெட்டிக்கு விருது கொடுத்தது குறித்து விமர்சித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
தாதாசாகேப் பால்கே விருது என்பது மத்திய அரசால் அளிக்கப்படும் விருதாகும். இவ்விருதானது 1969-ஆம் ஆண்டிலிருந்து தரப்பட்டு வருகின்றது. சினிமாத்துறையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வ்விருதை பெறுபவர்களுக்கு ரூ.10 இலட்சம் சன்மானமும், தங்க தாமரை பதக்கமும் வழங்கப்படுகின்றது.
ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வந்ததை தொடர்ந்து, மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்த செய்திகள் ஏதேனும் வந்துள்ளதா என தேடினோம். ஆனால் இது தொடர்பான எந்த அறிக்கையோ/அறிவிப்போ நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து ரிஷப் ஷெட்டியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் ரிஷப் ஷெட்டி அவரது டிவிட்டர் பக்கத்தில், தாதாசாகேப் பால்கே இன்டெர்நேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதை பெற்றதற்கு பெருமை கொள்வதாக குறிப்பிட்டு, அவ்விருதை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படங்கள் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
மத்திய அரசு வழங்கும் தாதாசாகேப் பால்கே விருதில் பதக்கங்கள் வழங்கப்படுமேயொழிய, விருது ஏதும் வழங்கப்பட மாட்டாது. மத்திய அரசின் இணையத்தளத்தில் காணப்படும் புகைப்படங்கள் வழியாக இது நமக்கு உறுதியாகின்றது.
அதேபோல் ரிஷப் ஷெட்டி தனக்கு கிடைத்த விருதை ‘தாதாசாகேப் பால்கே இன்டெர்நேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது’ என்று குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது. இதனையடுத்து அப்பெயரில் ஏதேனும் விருது தரப்படுகின்றதா என தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு விருது Dadasaheb Phalke International Film Festival (DPIFF) என்ற அமைப்பால் தரப்படுகின்றது என்பதை அறிய முடிந்தது.
DPIFF என்பது 2016 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட தனியார் அமைப்பாகும். இந்த அமைப்பானது ஆண்டுதோறும் இந்தி மொழியில் வரும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் இணையத் தொடர்களிலிருந்து சிறந்த படைப்புகள், படைப்பாளிகள், மற்றும் நடிகர்களை தேர்ந்தெடுத்து தாதாசாகேப் பால்கே இன்டெர்நேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது என்ற பெயரில் விருதுகள் அளித்து வருகின்றது.
இந்த அமைப்பே ரிஷப் ஷெட்டிக்கு அதிக நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற விருதை வழங்கியுள்ளது. இத்தகவலை இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் காண்கையில் DPIFF என்ற தனியார் அமைப்பே ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே இன்டெர்நேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது என்ற பெயரில் விருதை வழங்கியுள்ளது என்றும், இந்த விருது மத்திய அரசு வழங்கும் தாதாசாகேப் பால்கே விருதிலிருந்து வேறுபட்டது என்பதும் தெளிவாகின்றது.
Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Official Website Of Directorate of Film Festivals
Official Website Of Dadasaheb Phalke International Film Festival
Facebook Post from Dadasaheb Phalke International Film Festival
Tweet from Rishab Shetty
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|