About: http://data.cimple.eu/claim-review/656658740f42b9157fc00a5a7effff8b398cfd1c49be0dfbbbc3fdea     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றார் மோடி. Fact: மோடி இவ்வாறு பேசவே இல்லை. வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். “மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்படமுடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு”என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா? மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் டெல்லி பாஜக தலைமையகத்தில் மோடி பேசிய வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஏறக்குறைய 34 நிமிடம் இருக்கும் அவ்வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி பேசி இருக்கவில்லை. இதனையடுத்து தேடியதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்கவிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறியதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பது தெளிவாகின்றது. தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் பேசியதில் அவரும் இத்தகவல் பொய்யானது என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் “பாஜக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி அளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி; தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை அளித்து இடமளித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் விருப்பங்களை சிறப்பாக நிறைவேற்றிய எங்களது பணி மேலும் தொடர மக்கள் அளித்த தீர்ப்பு இது” என்று மோடி பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார். Also Read: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா? மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Narendra Modi’s Youtube channel video, Dated June 04, 2024 X Post from Puthiya Thalaimurai, Dated June 04, 2024 Report from TOI, Dated June 06, 2024 Phone Conversation with S.G.Suryah, State Secretary, BJP Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan February 5, 2025 Ramkumar Kaliamurthy January 3, 2025 Ramkumar Kaliamurthy December 28, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software