About: http://data.cimple.eu/claim-review/736986a595c05c13a18d17547dd47928c41d29d3123c2a9827a97c23     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்றார் எஸ்.ஜி.சூர்யா Fact: இத்தகவல் தவறானது என்று எஸ்.ஜி. சூர்யா மறுத்துள்ளார் ‘வேவு பார்க்கும் தலைமையின் கீழ் கட்சிப்பணி செய்ய மனமின்றி, மிகவும் குழப்பமான மனநிலையில் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறேன். எனது நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் சென்று விடலாம் எனும் எண்ணத்துடன் உள்ளேன்’ என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. வைரலாகும் இப்பதிவுகளின் சேமிப்பு பதிவுகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என குறிப்பிட்டதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்! Factcheck / Verification நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் இத்தகவல் புதிய கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம். அதில் இந்த நியூஸ்கார்டை இந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கதிர் நியூஸை சேர்ந்த பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் குறித்து விசாரிக்கையில், அவர் ‘அந்த நியூஸ்கார்ட் போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை’ என்று தெளிவுப்படுத்தினார். இதனையடுத்து எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், ‘இத்தகவல் முற்றிலும் பொய்யானது’ என்று மறுப்பு தெரிவித்தார். Also Read: Fact Check: அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று பரவும் தவறான செய்தி! Conclusion நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Phone Conversation with SG Surya, State Secretary, BJP, dated March 11, 2023 Phone Conversation with Pradeep, Kathir News, dated March 11, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software