About: http://data.cimple.eu/claim-review/7c4ae9c42ec39499f6a3bc90bbfacb2883654b87ed27d87ff6e125cb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: ஜோதிகா கவர்ச்சி உடையில் காமசூத்ரா புத்தகத்தை ஒரு ஆணிடமிருந்து பெற்றுக்கொண்டார். Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மை படத்தில் ஜோதிகா மற்றும் அவர் கூட இருக்கும் நபர் முழுவதுமாக உடை அணிந்துள்ளனர். அதே போல் ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது ‘ஈட் யுவர் கேக், லாஸ் யுவர் வெய்ட்’ எனும் புத்தகமாகும்; காமசூத்ரா அல்ல. நடிகை ஜோதிகா கவர்ச்சியான உடற்பயிற்சி ஆடை அணிந்துக்கொண்டு மேற்சட்டை அணியாத மற்றொரு ஆணிடமிருந்து காமசூத்ரா புத்தகத்தை பெற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்? Fact Check/Verification ஜோதிகா கவர்ச்சி உடையில் காமசூத்ரா புத்தகத்தை ஒரு ஆணிடமிருந்து பெற்றுக்கொண்டதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில் அசார் அலி சையது என்பவரின் லிங்டின் பக்கத்தில் அவர் எழுதிய “ஈட் யுவர் கேக், லாஸ் யுவர் வெய்ட் (Eat Your Cake, Lose Your Weight)” புத்தகத்தை நடிகை ஜோதிகாவுக்கு அளித்ததாக கூறி புகைப்படம் ஒன்றை பகிருந்திருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் ஜோதிகாவும் அசார் அலி சையதும் முழுவதுமாக உடை அணிந்துள்ளதை காண முடிந்தது. அதே போல் ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது ‘ஈட் யுவர் கேக், லாஸ் யுவர் வெய்ட்’ எனும் புத்தகமேயாகும். காமசூத்ரா அல்ல. இதன்படி பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம். Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி! Conclusion ஜோதிகா கவர்ச்சி உடையில் காமசூத்ரா புத்தகத்தை ஒரு ஆணிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Altered Photo Our Sources LinkedIn post from Azhar Ali Sayed, Book Author (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software