About: http://data.cimple.eu/claim-review/7cf0280208bdf0433ab48da8cf67aa5f6add9b79dea3ecc32223392b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் பேசினார் சீமான். Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். நாதக தரப்பும், புதிய தலைமுறை தரப்பும் இதை உறுதி செய்துள்ளது. “தேசத்துக்காக சிறை சென்ற சாவர்க்கரை இழிவுப்படுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்தவேண்டாமா?” என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று கூறினாரா ஒளிப்பதிவாளர் சந்தோஷ்? Fact Check/Verification சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் சீமான் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். நம் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டிருந்த தேதியான ஜனவரி 27, 2025 அன்று, சீமான் ஈரோட்டில் ஆற்றிய பரப்புரையானது நாதகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பரப்புரையை முழுமையாக கேட்டதில் எந்த ஒரு இடத்திலும் சீமான் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள கருத்தை பேசி இருக்கவே இல்லை அறிய முடிந்தது. தெளிவாக கூறவேண்டுமென்றால் அவ்வுரையில் சாவர்க்கர் என்ற பெயரையே அவர் கூறி இருக்கவில்லை. இதனையடுத்து நாதக செய்தித்தொடர்பாளர் செ.பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் ‘இத்தகவல் முற்றிலும் பொயானது‘ என்று அவர் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து வைரலாகும் இத்தகவல் புதிய தலைமுறை நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக கால்நடை வளர்ப்பதை அரசு வேலையாக்க முடியும் என்று சீமான் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை இணையத்தில் தெளிவு செய்திருப்பதை காண முடிந்தது. இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் ‘வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது‘ என்று அவரும் உறுதி செய்தார். Also Read: ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனரா? Conclusion சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் சீமான் பேசியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Youtube Video from NTK, Dated January 27, 2025 X post by Puthiya Thalaimurai, Dated January 27, 2025 Phone Conversation With Packiarajan, Spokesperson, NTK Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai Website post by Puthiya Thlaimurai, Dated January 28, 2025 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software