schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் நோய் இருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் இந்த செய்தி “நடிகை அனுஷ்காவிற்கு அரியவகை நோய்” என்பதாக வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?
நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி இருப்பதாக பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அனுஷ்காவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் அவருடைய இந்த வியாதி குறித்து ஏதேனும் பதிவாகியுள்ளதா என்று தேடியபோது அவ்வாறு எந்த செய்தியும் பதிவாகியிருக்கவில்லை.
தொடர்ந்து, அவருடைய பழைய பேட்டிகளைக் கண்ணுற்றபோது 2015ஆம் ஆண்டு Zee தெலுங்கில் வெளியான Konchem Touch lo Unte Chepta என்கிற நிகழ்ச்சியில் அனுஷ்கா குறித்து பேசியிருந்த நடிகை தமன்னா, “அனுஷ்கா பற்றிய ஒரு சீக்ரெட் சொல்றேன். ஸ்வீட்டிக்கு (அனுஷ்காவின் செல்லப்பெயர்) ஒரு சிரிக்கும் பழக்கம் உள்ளது.சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்தாமல் சிரிப்பார். விழுந்து விழுந்து சிரிப்பார். ஆனால், அவரிடம் பிடித்ததே அந்த சிரிப்புதான்” என்று தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து பதிலளித்த அனுஷ்கா, ”நான் சிரிக்க ஆரம்பித்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரும் 15 முதல் 20 நிமிடம் ப்ரேக் எடுத்து சாப்பிட சென்றுவிடுவார்கள். ஏனெனில், நான் 15 முதல் 20 நிமிடம் அங்கங்கு நின்று நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருப்பேன்.” என்று நகைச்சுவையான வகையில் இயல்பாக கூறியுள்ளார். தற்போது எந்த பேட்டியிலும் அவர் தனக்கு சிரிப்பு வியாதி இருப்பதாக சொல்லியிருக்கவில்லை.
இந்த வீடியோ ஜீ-தெலுங்கு அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரில் ”Anushka shetty fanclub” கடந்த 2017ஆம் ஆண்டு இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அனுஷ்கா சாதாரணமாக கூறிய அவரது சிரிப்பு பற்றிய தகவலையே தற்போது ஊடகங்கள் அவருக்கு சிரிப்பு வியாதி இருப்பதாக பரப்பி வருகின்றனர்.
Also Read: உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம்; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?
நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி இருப்பதாக பரவும் தகவல் தவறானது; பழைய செய்தி மற்றும் அவர் இயல்பாக கூறிய பதிலே அவருக்கு சிரிப்பு வியாதி இருப்பதாக பரவுகிறது என்பது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, Anushka Shetty Fanclub™, Dated January 29, 2017
Twitter Post From, Anvitasalaar, Dated February 16, 2023
Video Show Link From, Zee5
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
|