About: http://data.cimple.eu/claim-review/88d651d80e78759ff0b2f1e815c73314d29bec105135b0c7c691f568     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மை சரிபார்ப்பு: அர்பிதா முகர்ஜி டிஎம்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சொல்லும் வைரல் பதிவு தவறாக வழிநடத்துவது. சமூக ஊடகங்களில் வலம் வரும் அர்பிதா முகர்ஜியின் வைரல் படம் 2022-இல் நடந்த TMC-யின் நிகழ்ச்சியிலிருந்து அல்ல, அது 2020-இல் கொல்கொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட ஒரு ரத்த தான முகாமிலிருந்து வந்தது. எனவே, இந்த க்ளைம் தவறாக வழி நடத்துவது என்று நிரூபிக்கப்பட்டது. - By: Devika Mehta - Published: Aug 8, 2022 at 11:28 AM புது டெல்லி : (விஷ்வாஸ் நியூஸ்): அர்பிதா முகர்ஜி திரினாமூல் காங்கிரஸ் (TMC) நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அர்பிதா முகர்ஜி ஜூலை 21, 2022 அன்று நடந்த மமதா பானர்ஜியின் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று க்ளைம் செய்யப்பட்டது. இருந்தாலும், விஷ்வாஸ் நியூஸ் புலன் விசாரணை செய்து அந்த க்ளைம் தவறாக வழி நடத்துவது என்று கண்டுபிடித்தது. அர்பிதா முகர்ஜி கொல்கொத்தாவில் நடந்த ஒரு அரசியல் சார்பற்ற ரத்த தான முகாம் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட இது 2020-ஆம் வருடத்துக்கான ஒரு இரண்டு வருட பழைய படம். க்ளைம் 2.3 ஆயிரம் பேர் தொடர்கின்ற பேஸ்புக் பயனர் சந்திர ஷாகர் பானர்ஜி ஒரு நிகழ்ச்சியில் அர்பிதா முகர்ஜி கலந்து கொண்ட படத்தை பதிவிட்டு இவ்வாறு க்ளைம் செய்தார்: “TMC-யின் ‘சரித்திரப் புகழ் வாய்ந்த’ ஜூலை 21 நிகழ்ச்சியில் மேடையில் முன்னாள் கல்வி அமைச்சரின் “நல்ல நண்பர்” குமாரி அர்பிதா முகர்ஜியின் வசீகரமான பங்கேற்பு.” https://t.co/tZwMkiqh7l.” ஃபேஸ்புக் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே காணலாம். குறிப்பாக, ஒரு செய்தி அறிக்கையின்படி, அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து கணக்கில் வராத 21 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமலாக்க இயக்குனரகத்தால் அவர் கைது செய்யப்பட்டார். புலன் விசாரணை உண்மையை அறிய விஷ்வாஸ் நியூஸ் கூகுள் ரிவர்ஸ் இமேஜ்-இல் அந்தப் படத்தின் கீஃபிரேம்களைத் தேடியது. அதே போன்ற பதிவுகள் பல பயனர்களால் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சமூக ஊடகங்களில் ஜூலை 23 அன்று அர்பிதா முகர்ஜியின் படம் ஒன்றை அப்லோட் செய்து , அவர் தர்மதலாவில் திரினாமூல் காங்கிரஸின் (TMC) தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றதாக க்ளைம் செய்திருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவு சொல்கிறது – “TMC-யின் ‘சரித்திரப் புகழ் வாய்ந்த’ ஜூலை 21 நிகழ்ச்சியில் மேடையில் முன்னாள் கல்வி அமைச்சரின் “நல்ல நண்பர்” குமாரி முகர்ஜியின் வசீகரமான பங்கேற்பு.” சுவேந்து அதிகாரியை கிட்டத்தட்ட 176.6 ஆயிரம் பேர் தொடர்கிறார்கள், மேலும் அவருடைய பதிவு 425-க்கும் அதிகமான தொடர்பவர்களால் மறு-ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. சுவேந்துவின் க்ளைம்களை மறுத்து ஒரு பதிவு ட்விட்டரில் காணப்படுகிறது. அது கூறுகிறது: “போலிச் செய்தி பற்றிய எச்சரிக்கை: சுவேந்து அதிகாரி இந்தப் படம் ஜூலை 21 ஷாஹித் திபஸ் நிகழ்ச்சியிலிருந்து என்று க்ளைம் செய்கிறார். உண்மை: இந்தப் படங்கள் ஜனவரி 23, 2020 அன்று குடீரம் அனுஷிலான் கேந்த்ராவில் காளிகாட் விளையாட்டு மன்றத்தால் நடத்தப்பட்ட ரத்த தான முகாமின்போது எடுக்கப்பட்டன.” இந்தப் புலன் விசாரணையில் இன்னும் ஆழமாகச் சென்று, இதே படத்தை அனைத்திந்திய திரினாமூல் காங்கிரஸின் மாநில தகவல் தொடர்பாளரும் திரினாமூல் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான தேபாங்க்ஷு பட்டாச்சார்யா தேவ் ஜூலை 24, 2022 அன்று பகிர்ந்து, விளக்கம் அளித்ததைக் கண்டு பிடித்தோம். “பாரம் இறக்கும் எதிர்க்கட்சி தலைவர் சுற்றுக்கு அனுப்பியிருக்கும் அர்பிதா முகர்ஜியின் படம் ஜூலை 21 கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று கூறுவது பொய். இந்தப் படம் ஒரு அரசியல் சார்பற்ற ரத்த தான முகாமில் எடுக்கப்பட்டது. ஜிமெயில் மூலம் தொடர்பு கொண்டபோது, தேபாங்க்ஷு பதிலளித்தார், “ஆம், ஜூலை 21 தியாகிகள் தினக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று அவர்கள் பகிரும் படம், உண்மையில் காளிகாட் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் மன்றத்தால் 2020-ஆம் வருடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ரத்த தான முகாமில் எடுக்கப்பட்டது.” இந்த ட்விட்டர் பதிவை இங்கே காணலாம். புலன் விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்த வைரல் படத்தில் அர்பிதா முகர்ஜியுடன் உட்கார்ந்திருந்த நடிகர் த்ரம்பக் ராய் சௌதரியுடன், ஃபேஸ்புக் மெசஞ்சரில் விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. அவர் தன் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவை (ஜூலை 23, 2022 தேதியிடப்பட்டது) எங்களோடு பகிர்ந்தார். அதன்படி அந்த வைரல் படம் 2020-இல் நடந்த ஒரு ரத்த தான முகாம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே காணலாம். निष्कर्ष: சமூக ஊடகங்களில் வலம் வரும் அர்பிதா முகர்ஜியின் வைரல் படம் 2022-இல் நடந்த TMC-யின் நிகழ்ச்சியிலிருந்து அல்ல, அது 2020-இல் கொல்கொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட ஒரு ரத்த தான முகாமிலிருந்து வந்தது. எனவே, இந்த க்ளைம் தவறாக வழி நடத்துவது என்று நிரூபிக்கப்பட்டது. - Claim Review : அர்பிதா முகர்ஜி TMC நிகழ்ச்சியில் பங்கேற்றார். - Claimed By : பேஸ்புக் பயனர்: சந்திர ஷாகர் பானர்ஜி - Fact Check : Misleading Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software