schema:text
| - Data Reports
மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை வாங்கிய கமிஷன் பட்டியலை வெளியிடுவேன் என்றாரா காயத்ரி ரகுராம்?
மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை எந்தெந்த காண்ட்ராக்டர்களிடம் எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?
Fact Check/Verification
மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிந்தது.
காயத்ரி ரகுராம் பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது‘ என்று தெரிவித்திருந்தார். இதை தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், இத்தகவல் பொய்யானது என்பதை அவரும் தெளிவு செய்தார்.
காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டப்பின் அவர் குறித்து தொடர்ந்து போலிச்செய்திகள் பரவி வருகின்றது. அவற்றை நியூஸ்செக்கர் சார்பில் முறையாக ஆய்வு செய்து, அவை பொய் செய்திகள் என்று நிரூபித்திருந்தோம். அவற்றின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளோம். அந்த வரிசையில் இதுவும் பொய் செய்தி என்பது உறுதியாகியுள்ளது.
Also Read: ‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?
Conclusion
அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Facebook post, from Thanthi TV, on November 22, 2022
Phone Coversation with Gayathri Raghuram, on November 25, 2022
Phone Coversation with Vinoth, Thanthi Tv, on November 25, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 17, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
Ramkumar Kaliamurthy
December 27, 2024
|