About: http://data.cimple.eu/claim-review/906c872ae584807d23b5404aa55eb23310235733046a75fc62adfa36     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலினை தாக்கி கமெண்ட் செய்தார் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத். Fact: வைரலாகும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். ஏபிபி நாடு தரப்பு இதை தெளிவு செய்துள்ளது. திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேற்றைய முன்தினம் (20/06/2024) நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் கமெண்ட் செய்ததாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு! கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலினை தாக்கி பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் கமெண்ட் செய்ததாக பரவும் நியூஸ்கார்டானது ஏபிபி நாடின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் உள்ளதால் அந்த ஊடகம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. மாறாக “கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் நலம் விசாரித்தது குறித்து அனிதா சம்பத் கமெண்ட்” என்று குறிப்பிட்டு மற்றொரு நியூஸ்கார்டைவெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இதனைத் தொடர்ந்து ஏபிபி நாடின் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை தொடர்புக் கொண்டு பேசுகையில் அவரும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார். தொடர்ந்து தேடியதில் ஏபிபி நாடு வெளியிட்டிருந்த இச்செய்தி தவறானது என்று அனிதா சம்பத் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது. “என்னுடைய கமெண்ட் விஜயை பற்றியது இல்லை. அவரை எங்கேயும் நான் குறிப்பிடவில்லை. விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியே. மனைவி, பிள்ளைகளை கவனிக்காமல் ஏழை பின்புலத்தில் இருந்தும் காசை கொண்டு போய் கள்ளச் சாராயம் குடிக்கிறேன் என்று மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை ஊடகம் தியாகி மாதிரி காட்டுகின்றார்கள் என்று உங்களை (ஏபிபி நாடு) பற்றித்தான் கூறினேன். இதற்கும் விஜய்க்கும் தொடர்பில்லை” என்று ஏபிபி நாடு வெளியிட்டிருந்த நியூஸ்கார்டுக்கு அனிதா மறுப்பு தெரிவித்திருந்தை காண முடிந்தது. Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு! கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலினை தாக்கி பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் கமெண்ட் செய்ததாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources X post from ABP Nadu, Dated June 20, 2024 Phone Conversation with Shanmuga Sundaram, Editor, ABP Nadu (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy June 28, 2024 Ramkumar Kaliamurthy June 27, 2024 Ramkumar Kaliamurthy June 24, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software