About: http://data.cimple.eu/claim-review/9e38dd8575aedec0ef57e0a8f9c50dc22450892dc55e98637d24f854     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாஜகவினரின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகாமல் இருக்க, அவர்களிடம் பல கோடி ரூபாயை பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டி பெற்றதாக சமூக வலைத்தளங்களில் நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். Also Read: சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை பாலிமர் நியூஸ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாலிமர் நியூஸின் செய்தித் துறை பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அதற்கு அவர், “இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்” என்று நமக்கு விளக்கமளித்தார். இதனையடுத்து தமிழக பாஜகவின் ஐ.டி. விங் (IT Wing) தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். “இது முற்றிலும் பொய்யானத் தகவல் என்று அவர் உறுதி செய்தார். Also Read: ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Polimer News Editorial incharge Testimonial CTR Nirmal Kumar, BJP IT Wing President (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan February 5, 2025 Ramkumar Kaliamurthy January 3, 2025 Ramkumar Kaliamurthy December 28, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software