About: http://data.cimple.eu/claim-review/a465682ad760f1737c952407bcc4a25a57a41a632aa7a675db99fad6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: அப்பல்லோ மிஷன் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நாசா வீடியோ சந்திரயான்-3 காட்சிகளாக தவறாகப் பரப்பப்பட்டது - By: Pallavi Mishra - Published: Sep 18, 2023 at 05:50 PM புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). சந்திரயான்-3 மிஷனின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று சந்திர மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை அடைந்த பிறகு, தொலைவில் இருந்து பூமியை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நிலவின் மேற்பரப்பின் உணரப்பட்ட நெருக்கமான காட்சியையும் வீடியோ காட்டுகிறது. இது சந்திரயான்-3 எடுத்த காட்சிகள் என்று வைரலான பதிவுகள் கூறுகின்றன. விசாரணையில், விஸ்வாஸ் நியூஸ் வைரலான காணொளி உண்மையில் 2020-இல் அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் (நாசா) வெளியிட்ட காணொளி என்று கண்டறியப்பட்டது. எப்படியும் அது உண்மையான காட்சிகள் அல்ல. இந்த காணொளி 1970-இல் அப்பல்லோ 13 பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணினியால் உருவாக்கப்பட்ட படங்களின் தொகுப்பாகும். வைரலான பதிவில் என்ன இருக்கிறது? ஆகஸ்ட் 23 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்தவர்களில் ‘சோனு கோல்டன் பாய்’ என்ற பெயரில் ஒரு முகநூல் பக்கமும் இருந்தது. “அதன் தலைப்பில் கூறி இருப்பதாவது, “சந்திரயான்-3 மூலம் நிலவின் உட்புறக் காட்சி பிடிப்பு. சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ஆம் தேதி சரித்திரம் படைக்கவுள்ளது. அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், வாழ்த்துகள்.” இந்த பதிவிற்க்கான காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே அணுகலாம். விசாரணை வைரலான கூற்றை சரிபார்க்க, நாங்கள் இந்த காணொளியை படம் படமாக நிறுத்தி ஸ்கேன் செய்தோம். அப்போது ஒரு கீஃப்ரேம் சில வாசகத்தைக் காட்டுவதை நாங்கள் கவனித்தோம் அதுவானது, “ஒருமுறை பூமி இறுதியாக பார்வைக்குத் திரும்பியது. விண்வெளி வீரர்கள் மிஷன் கன்ட்ரோலுடன் வானொலி தொடர்பை மீண்டும் நிறுவ முடிந்தது.” ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி நாங்கள் அதை ஆராய்ந்தோம். நாங்கள் அதிலிருந்து அந்த வாசகத்தையும் நகலெடுத்து அதன் மூலத்தைத் தேடி பார்த்தோம். பிப்ரவரி 24, 2020 அன்று நாசா இணையதளத்தின் அறிவியல் காட்சிப்படுத்தல் ஸ்டுடியோ பிரிவில், வெளியிடப்பட்ட கட்டுரையில் இதே வாக்கியம் இடம்பெற்றிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதனுடன் இருக்கும் சிறுபடம் வைரலான காணொளியின் ஒரு பகுதியாக இருந்த கீஃப்ரேம் போலவே இருந்தது. இந்தப் பக்கத்தில் இந்த காணொளியையும் கண்டோம். இங்குள்ள தகவலின்படி, இந்த காணொளி 1970-இல் அப்பல்லோ 13 பயணத்தின் போது கைப்பற்றப்பட்ட மல்டிமீடியா தரவைப் பயன்படுத்தி தரவு காட்சிப்படுத்தலின் அடிப்படையில் அமைந்துள்ளது. மார்ச் 2, 2020 அன்று பதிவேற்றப்பட்ட நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் இந்த காணொளியை கண்டோம். இந்த காணொளியின் விளக்கம் தெளிவாகக் கூறுகிறதாவது: 1970 ஆம் ஆண்டில் அப்பல்லோ 13 விண்வெளி வீரர்கள் தங்கள் ஆபத்தான பயணத்தில் கண்ட சந்திரனின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை மீண்டும் உருவாக்க சந்திர மறுசீரமைப்பு ஆர்பிட்டர் விண்கலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவை இந்த காணொளி பயன்படுத்துகிறது. இந்த காட்சிப்படுத்தல்கள், 4K தெளிவுத்திறனில், பூமியின் அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தில் தொடங்கி, மிஷன் கன்ட்ரோலுடன் ரேடியோ தொடர்பை அப்பல்லோ 13 மீண்டும் நிறுவிய நேரத்தில் முடிவடையும் சந்திர மேற்பரப்பின் பல்வேறு காட்சிகளை சித்தரிக்கிறது. மேலும் சந்திரனைச் சுற்றி சுதந்திரமாகத் திரும்பும் பாதையின் பாதையும், அந்தப் பாதை முழுவதும் சந்திரனின் தொடர்ச்சியான காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எல்லா பார்வைகளும் நேர நோக்கங்களுக்காக துரிதப்படுத்தப்பட்டுள்ளன – அவை ‘நிகழ்நேரத்தில்’ காட்டப்படவில்லை. நன்மதிப்பு: தரவு காட்சிப்படுத்தல்: எர்னி ரைட் (USRA) காணொளி தயாரித்து திருத்தியவர்: டேவிட் லாட் (USRA) யுனிவர்சல் புரொடக்ஷன் இசை வழங்கிய இசை: ‘விஷன்ஸ் ஆஃப் கிராண்டியர்’ – ஃப்ரெடெரிக் வைட்மேன்” மேலும் உறுதிப்படுத்தலுக்கு, இந்த காணொளிக்கான தரவு காட்சிப்படுத்தலைச் செய்த எர்னஸ்ட் ரைட்டை அவரது அதிகாரப்பூர்வ நாசா மின்னஞ்சல் ஐடியில் (இணையதளத்தில் கிடைக்கும்) தொடர்பு கொண்டோம். அவர் பதில் அளித்தது என்னவென்றால், ”நீங்கள் என்னுடன் பகிர்ந்த ஃபேஸ்புக் இடுகையின் காட்சிகள் உண்மையில் 1970 இல் சந்திரனுக்குப் பின்னால் சென்ற அப்பல்லோ 13 இலிருந்து நான் உருவாக்கிய கணினி உருவகப்படுத்துதலாகும். இது லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் தரவு மற்றும் படங்களைப் பயன்படுத்துகிறது. அந்தக் காட்சிகளின் மூலத்திற்கான நேரடி இணைப்பு https://svs.gsfc.nasa.gov/4791/. சந்திரயான் 3 சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பின் உண்மையான மற்றும் அழகான காட்சிகளை எடுத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிலவின் தென் துருவத்தைப் பற்றி லேண்டர் என்ன கண்டுபிடிக்கும் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.” இந்த காணொளியின் எடிட்டரும் தயாரிப்பாளருமான டேவிட் லாட்டையும் நாங்கள் அணுகினோம். அப்பொழுது அவர் கூறியதாவது, “அந்த காணொளியின் வரவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, நான் காணொளி தயாரிப்பாளராகவும் எடிட்டராகவும் இருந்தேன், மேலும் எர்னி ரைட் தரவு காட்சிப்படுத்தியவர் என்பதை உறுதிப்படுத்த முடியும். நீங்கள் காணும் சந்திர நிலப்பரப்பின் அழகிய காட்சிகள் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து கட்டமைக்கப்பட்டுள்ளன, மேலும் அப்பல்லோ 13 விண்வெளி வீரர்கள் 1970 இல் தங்கள் பணியில் என்ன பார்த்தார்கள் என்பதை சித்தரிக்கிறது.” சந்திரயான்-3 பற்றிய சமீபத்திய தகவல்களை இஸ்ரோவின் இணையதளம் மற்றும் இஸ்ரோவின் சமூக ஊடக கணக்குகளில் காணலாம். இறுதியாக, தவறான உரிமைகோரலைச் செய்யும் பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஸ்கேன் செய்தோம். முகநூல் பயனர் ‘சோனு கோல்டன் பாய்’க்கு 200க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் “மூன் இன்சைட் வியூ” என்று கூறப்படும் வைரலான காணொளி சந்திரயான்-3 உடன் தொடர்புடையது அல்ல என்று கண்டறிந்தது. இந்த காணொளி 2020-இல் நாசாவால் வெளியிடப்பட்ட அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் அப்பல்லோ 13 பயணத்தின் தரவு காட்சிப்படுத்தலின் அடிப்படையிலானது. - Claim Review : சந்திரயான்-3 மூலம் நிலவின் உட்புறக் காட்சி பிடிப்பு - Claimed By : முகநூல் பயனர் சோனு கோல்டன் பாய்’ - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software