About: http://data.cimple.eu/claim-review/abf5b678fd50a1c2b26e772cf38fd3a64ae2be6cf493f6aa2c0b0b37     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்றாரா அமைச்சர் வி.கே.சிங்? மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. “தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும்” என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாக அந்த செய்தி புகைப்படம் பரவுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா? Fact Check/Verification மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். மதுரை விமான நிலைய பெயர் மாற்றம் குறித்து சமீபத்திய செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று தேடியபோது அவ்வாறு எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட வைரல் புகைப்படம் பாஜக தமிழ்நாடு அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்க லோகோவுடன் இருந்த காரணத்தினால் அதில் தேடியபோது, “மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை” என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாக செய்திப்புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதே டெம்ப்ளேட்டுடனேயே குறிப்பிட்ட வைரல் புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது என்பது நமக்கு உறுதியானது. தொடர்ந்து இதுகுறித்து பாஜக தகவல் தொடர்பு அணியின் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, அவர் “குறிப்பிட்ட செய்தி மற்றும் புகைப்படம் போலியானது” என்று உறுதி செய்தார். Also Read: திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்! Conclusion மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Altered Media Sources Facebook post, From BJP Tamil Nadu, Dated December 30, 2022 Phone Conversation with CTR Nirmal Kumar, State President IT & Social Media BJP, Dated January 08, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy December 28, 2024 Ramkumar Kaliamurthy December 27, 2024 Ramkumar Kaliamurthy November 21, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software