| schema:text
| - Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இணையதள மோசடிகள் குறித்து கார்த்தி நடித்த விழிப்புணர்வு காணொளியை எடிட் செய்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கோடி ரூபாய் நிதியாக கேட்பதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்து தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டதா புதிய தலைமுறை?
Fact Check/Verification
நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் பற்றிய தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு காணொளி” என்று குறிப்பிட்டு நடிகர் கார்த்தி தோன்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ குறித்து குமுதம், சினிமா விகடன் உள்ளிட்ட ஊடகங்களின் எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
கார்த்தி நடித்த இந்த விழிப்புணர்வு வீடியோவை வைரலாகும் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த வீடியோவை எடிட் செய்தே வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சீமானின் குரல், நாதக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்த்தி பேசும் குரல் போன்றவை Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததை தொடர்ந்து True Media இணைய கருவியை பயன்படுத்தி இதுக்குறித்து ஆராய்ந்தோம். அதில் குரல் பகுதி Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்பட்டது என உறுதியானது.
Also Read: திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு பட்டை மற்றும் நாமம் போட்டு வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதா?
Conclusion
நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இணையதள மோசடிகள் குறித்து கார்த்தி நடித்த விழிப்புணர்வு காணொளியை எடிட் செய்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
X post by Tamilnadu Police, January 29, 2025
Truemedia.Org
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
|