| schema:text
| - Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: மேக்கப்பில் ஜொலிக்கும் கும்பமேளா மோனாலிசா
Fact: வைரலாகும் வீடியோ AI மூலமாக டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளது.
மேக்கப்பில் ஜொலிக்கும் கும்பமேளா வைரல் ‘மோனாலிசா’ என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்குல்ல? இது வேற யாரும் இல்ல நம்ம கும்பமேளா “பிரவுன்பியூட்டி” மோனோலிசா தான்.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று கூறினாரா ஒளிப்பதிவாளர் சந்தோஷ்?
Fact Check/Verification
மேக்கப்பில் மாடல் போன்று ஜொலிக்கும் கும்பமேளா வைரல் ‘மோனாலிசா’ என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
கும்பமேளாவில் பாசிமணிகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த மோனாலிசா போஸ்லே என்கிற இளம்பெண் அவருடைய அழகால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இந்நிலையில், அவர் மாடல் போன்று ஜொலிக்கும் வீடியோ என்று இந்த வீடியோ பரவிய நிலையில் வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். மோனாலிசா போஸ்லேவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும் அதுபோன்று எந்த வீடியோவும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், அவருடைய பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட பக்கத்தில் இந்த வீடியோவும், இதேபோன்ற பல்வேறு வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன.
அதில், நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. எனவே, வெவ்வேறு முறைகளில் இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்தபோது கடந்த டிசம்பர் 11, 2023 அன்று Reem Alharbi என்கிற UAE ஒப்பனைக்கலைஞர் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், noorrjabberr என்கிற மாடலின் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
மேலும், நூர் என்கிற அந்த பெண்ணின் மேக்கப்பிற்கு முன்பான தோற்றமும் அந்த ஒப்பனைக்கலைஞரின் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் lensme-UAE லென்சை அணிந்திருந்த நிலையில் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் இவரது வீடியோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோனாலிசா போஸ்லே என்று வைரலாகும் வீடியோ குறிப்பிட்ட நூர் என்கிற மாடலின் வீடியோவை Deep Fake செய்து பரவுகிறது என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.
Also Read: ஈரோட்டில் துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனரா?
Conclusion
மேக்கப்பில் மாடல் போன்று ஜொலிக்கும் கும்பமேளா வைரல் ‘மோனாலிசா’ என்று பரவும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Instagram Post from Reem Alharbi, Dated December 11, 2023
Instagram Post by Lensmeuae, Dated March 15, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
|