About: http://data.cimple.eu/claim-review/b51b4a1b6b6b9051102106e980dc11a893c2521fd6da93ff68211aa5     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing. Claim: கலைஞரை கூட விமர்சியுங்கள்; பெரியாரை விமர்சிக்க வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது. கலைஞரை கூட விமர்சியுங்கள்; பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ”அடிச்ச அடில ஈவெராவுக்காக தன் தந்தையையே விட்டு கொடுத்துட்டார் நம்ம முதல்வர்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: 154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் தகவல் உண்மையானதா? Fact Check/Verification கலைஞரை கூட விமர்சியுங்கள்; பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அவர்களுடைய பக்கத்தில் இடம்பெற்றிருந்த நியூஸ்கார்டில், “பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் எங்களுக்கு தலைவருக்கு எல்லாம் தலைவர். சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி” என்று இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த முழுமையான கட்டுரையும் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”பெரியார்மீது விமர்சனம் செய்பவர்களை பெரிதுபடுத்தவும் இல்லை, பொருட்படுத்தவும் தேவையில்லை” என்றே தெரிவித்திருந்தார். கலைஞர் பற்றி இந்த பதிலில் அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. குறிப்பிட்ட நியூஸ்கார்டிலேயே வைரல் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது. தொடர்ந்து, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார். Also Read: சீமான் ஆபத்தான அரசியல் பேசுவதாக விமர்சனம் செய்துள்ளாரா இயக்குநர் வெற்றிமாறன்? Conclusion கலைஞரை கூட விமர்சியுங்கள்; பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Altered Image Our Sources X post by Puthiyathalaimurai, Dated January 31, 2025 Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated February 03, 2025 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software