About: http://data.cimple.eu/claim-review/b66d52277e5a8b10ecf5c4787242d4855e7fdf15a99b8b7636b49445     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழு Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழு என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”அன்பே வா தமிழ் திரைப்படத்தில் இருந்து இசை. இசைக்கு மொழி கிடையாது. நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் இசைக்கப்பட்டது.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ! எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழு என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாக பிரித்து ஆய்வுக்கு உள்ளாக்கியபோது அது நம்மை Vimalpercy என்கிற யூடியூப் பக்கம் ஒன்றிற்கு எடுத்துச் சென்றது. அதில் வைரலாகும் வீடியோவின் நீண்ட பதிவு நமக்குக் கிடைத்தது. பியானோ பழகும் முறையை வீடியோக்களாக வெளியிடும் இப்பக்கத்தில் அன்பே வா பாடலுக்கான பியானோ வாசிக்கும் விதம் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவின் கீழ் காணப்படும் பதிவில், விமல்பெர்சி என்னும் அந்த நபர் முதலில் பார்வையாளர்களுக்காக இந்த வீடியோவில் இசைக்குழு க்ளிப் இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் அது தவறான தகவலுடன் பரவியதால் அதில் இடம்பெற்ற இசைக்குழு காட்சியை Blur செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கீழே இடம்பெற்றுள்ள கமெண்ட்களிலும் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். மேலும், நம்முடைய ஆய்வில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் வெவ்வேறு இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகளில் இருந்து தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகியது. வயலின் வாசிக்கும் காட்சியானது Hilary Hahn என்கிற வயலின் இசைக்கலைஞரின் நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மற்ற காட்சிகள் “Royal Concertgebouw Orchestra Amsterdam” குழுவின் நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது நமக்குக் தெரிய வந்தது. எனவே, மேற்கண்ட வீடியோ காட்சி பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடையது அல்ல; இசைக்கலைஞர் ஒருவர் பல்வேறு இசைக்குழு நிகழ்வுகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்பது தெளிவாகிறது. Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா? எம்ஜிஆரின் ‘அன்பே வா’ திரைப்பட இசையை இசைத்த நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழு என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources YouTube Video From, Vimal Percy, Dated August 2021 YouTube Video From, Ahmed hermessi, Dated April 2013 YouTube Video From, BRASS of the Royal Concertgebouw Orchestra (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan January 20, 2025 Vijayalakshmi Balasubramaniyan May 26, 2023 Ramkumar Kaliamurthy May 18, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software