| schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இத்தகவலை IBC தமிழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?
வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் வீடியோ பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. சுயக்யா ராஜ் என்பவர் இந்த வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டிவி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த நிகழ்வு செய்தியாக வெளிவந்துள்ளதை காண முடிகின்றது.
இதனையடுத்து தொடர்ந்து தேடுகையில், கூடிய விரைவில் தொலைதூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று கடந்த சனிக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.
இதனைடிப்படையில் காண்கையில் வந்தே பாரத் ரயில்களில் இதுவரை படுத்துக்கொண்டு செல்லும் ஸ்லீப்பர் கோச்சுகள் இல்லை என்பதை அறிய முடிகின்றது. ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு வந்தே பாரத் ரயிலில் நிகழவில்லை என்பதையும், வந்தே பாரத் ரயில்களில் படுத்துக் கொண்டு செல்லும் வசதியே இல்லை என்பதையும் அறிய முடிகின்றது.
Also Read: பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு எல்.முருகன் ஆதரவு நடிகை தலைவராகின்றாரா?
வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்பதும், உண்மையில் அது சங்கமித்ரா எக்ஸ்பிரஸில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from @RaiSuyagya, on June 29, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 17, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
|