About: http://data.cimple.eu/claim-review/c429427dba82a2005048f76c8136a7818d0cc546307a4b77f4e7260e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: தேசியத் தலைவர் அவர்களுடன் நமது ஐயா பசுபதி பாண்டியன். Fact: வைரலாகும் புகைப்படத்தில் பிரபாகரனுடன் இருக்கும் மற்றொரு நபரின் முகத்தில் பசுபதி பாண்டியன் முகம் எடிட் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தேவேந்திர குல வேளாளர் அமைப்புத்தலைவர் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பசுபதி பாண்டியனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் ”தேசியத் தலைவர் அவர்களுடன் நமது ஐயா! தமிழினப் போராளி பசுபதி பாண்டியன் அவர்கள்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் புகைப்படத்தை ஆராய்ந்தபோது அது பலவருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது. அப்புகைப்படத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது கடந்த மே 30, 2021 அன்று ”வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 34வது ஆண்டு நினைவுகள்.” என்று இலங்கையின் இருப்பு இணையதளப்பக்கத்தில் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தில் வைரல் புகைப்படத்தில் பசுபதி பாண்டியன் முகம் இடம்பெற்றிருக்கும் நபர் வேறொருவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், Tamil Guardian ஊடகத்தில் கடந்த மே 05, 2020 அன்று “The birth of the LTTE” என்று வெளியாகியுள்ள கட்டுரையிலும் இருப்பு தளத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படமே இடம்பெற்றுள்ளது. அதிலும், பசுபதி பாண்டியன் முகம் இடம்பெற்றிருக்கும் நபர் இடத்தில் வேறொரு இளைஞரே இருக்கிறார். மேலும், ஈழத் தமிழர்கள் என்னும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பசுபதி பாண்டியனின் முகம் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டே பதிவிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தில் மற்றொரு நபரின் முகத்தில் பசுபதி பாண்டியனின் முகத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா? விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பசுபதி பாண்டியன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Report from Tamil Guardian, Dated May 05, 2020 Facebook Post From ஈழத்தமிழர்கள், Dated August 15, 2014 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan August 1, 2024 Ramkumar Kaliamurthy February 15, 2023 Vijayalakshmi Balasubramaniyan February 15, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software