schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழ்நாட்டில் வீடுவீடாகச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலைகளுக்கு இணையாக மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த வதந்திகளும் மக்களிடையே சமூக வலைத்தளங்களால் பெருமளவில் எப்போதும் ஷேர் செய்யப்படும்.
அவ்வகையில், தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு என்பதாக, “அவசரம்…அவசரம். யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து வருகிறோம். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலீஸில் பிடித்துக் கொடுங்கள்.
அவர்கள் ISIS இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்; வீட்டில் உள்ளவர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிக்கு தமிழ்நாடு காவல்துறை” என்பதாக தகவல் ஒன்று பரவுவதாக நம்முடைய நியூஸ்செக்கர் வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்றாரா வேல்முருகன்?
தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் தீவிரவாதிகள் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் செய்தியின் பின்புலம் குறித்து ஆராய்ந்தபோது அந்த தகவல் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது என்பது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து, தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தபோது அவர்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் “வதந்திகளை நம்பாதீர்” என்று குறிப்பிட்ட செய்தி போலியானது என்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று பதிவிட்டுள்ளனர்.
மேலும், சென்னை காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டே, உத்திர பிரதேச காவல்துறை இந்த செய்தியை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் உத்திர பிரதேச காவல்துறை குறிப்பிட்ட செய்தி போலியானது என்று தெரிவித்துள்ளது. இந்தியா டுடேவிலும் இதுகுறித்த கட்டுரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் தீவிரவாதிகள் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 24, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 9, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 3, 2023
|