Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Politics
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தியக் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களை சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்காமல் தரையில் நடக்க விட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link:https://archive.vn/QKfDd
இந்தியக் குடியரசு தலைவர் என்பவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். எந்த கட்சி சார்பின்மையும் இல்லாத பொதுவான தலைவர் ஆவார். இப்பேர்பட்டவரை அமித் ஷா அவமதித்தாக கூறி சமூக வலைத்தளங்களில் இத்தகவல் பரப்பப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குடியரசு தலைவரை அமித் ஷா அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, முதலில் இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம்.
கடந்த புதன் கிழமை ( 24/02/2020) அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்ட மோடேரா விளையாட்டரங்கம் மோடி விளையாட்டரங்கு என்று பெயர் மாற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.
இவ்விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படமே தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.இந்த விழாவின் மொத்த தொகுப்பும் ஒரு வீடியோவாக ராஷ்ட்ரபதி பவனின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
மொத்தம் ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் ஒடும் அவ்வீடியோவில் குடியரசு தலைவர் ராஜ்நாத் கோவிந்த் அவர்களே விழா நாயகனாக விளங்கினார். பூஜைக்கான முதற்கல் அவர் கையிலிறந்தே பெறப்பட்டது. திறப்பு விழாவும் அவர் தலைமையிலேயே நடந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் குடியரசுத் தலைவரும் அமித் ஷாவும் பூஜையை முடித்துவிட்டு விழா மேடையை நோக்கி செல்லும்போது எடுக்கப்பட்ட படமாகும். ஆனால் ராஷ்டரபதி பவன் பதிவேற்றிய வீடியோவில் இந்த காட்சியை காண முடியவில்லை.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தின் NDTV-யின் லோகோ இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது. ஆகவே நமக்கு தேவையான புகைப்படம் குறித்து NDTV-யின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் தேடினோம்.
நம் தேடலில் NDTV India எனும் யூடியூப் பக்கத்தில் மேற்கண்ட நிகழ்வு குறித்த செய்தி வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அவ்வீடியோவில் குடியரசுத் தலைவர் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் ஒரு காட்சியையும் நம்மால் காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் அவர்களை அமித் ஷா அவமானப்படுத்தி விட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்று நமக்கு தெளிவாகின்றது.
அமித் ஷா அவர்கள் இந்தியக் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களை சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்காமல் தரையில் நடக்க விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/r.r.raja.771/posts/258398292531377
Facebook Profile: https://www.facebook.com/raju.ramasamy.1/posts/3754809521264550
Twitter Profile: https://twitter.com/Janu_Bhaskar_/status/1365921287923666950
Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/637585-narendra-modi-stadium-2.html
President Of India: https://www.youtube.com/watch?v=9Vfohkh2nHc
NDTV India: https://www.youtube.com/watch?v=IELQZDfgkE0&feature=youtu.be
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
August 8, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2021
Vijayalakshmi Balasubramaniyan
September 24, 2021