About: http://data.cimple.eu/claim-review/d7de684095a287167708220f476f91f7d138e350f4670a710e0b69ec     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாரா? INTRO: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்தாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹரிஷ் ” இம் மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (23.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. Fact Check (உண்மை அறிவோம்) இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவான அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் ஹரீஸ் தெரவித்தாக Newsfirst நிறுவனம் செய்தி வெளியிட்டதாக ஒரு நிவூஸ்காட் சமூகவலைத்தளத்தில் பரவிவருகின்றமை காணக்கிடைத்தது. முதலில் நாம் Newsfirst தமிழ் பிரிவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் , எக்ஸ் பக்கத்தினை மற்றும் அவர்களின் இணையத்தளத்தினை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவ்வாறான எவ்விதமான செய்தியும் பிரசுரிக்கப்பட்டதாக எமது ஆய்வில் காணக்கிடைக்கவில்லை. இதனை மேலும் உறுதி செய்ய நாம் Newsfirst நிறுவனத்தின் இணையத்தள செய்தி பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த தகவல் முற்றிலும் போலியானது என எமக்கு உறுதி செய்தனர். நாம் இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் மாவட்ட செயலாளரை தொடர்புக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இவ்வாறு கருத்தினை வெளியிட்டாரா என வினவியபோது, அவர் இவ்வாறு கருத்தினை வெளியிடவில்லை என எமக்கு உறுதி செய்தார். இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விரைவில் சேர்ந்து பயணிப்போம் என ஹரீஸ் தெரிவித்ததாக பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டது. எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…. Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok Conclusion: முடிவு எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software