About: http://data.cimple.eu/claim-review/d9f31a1b314462a52f30f2be4ed4116f28e3b4260f5b9ccf4f679c31     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: நான் முதல்வரானால் ஹெச்.ராஜாவுக்கு முக்கிய பதவி தருவேன் என்றார் சீமான். Fact: வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று நாதக தரப்பும், நியூஸ் 7 தமிழ் உறுதி செய்துள்ளது. “பெரியாரின் சூழ்ச்சியால்தான் எச்.ராஜா போன்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக முடியவில்லை! நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: 154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் தகவல் உண்மையானதா? Fact Check/Verification நான் முதல்வரானால் ஹெச்.ராஜாவுக்கு முக்கிய பதவி தருவேன் என்று சீமான் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, நாதக செய்தித்தொடர்பாளர் செ.பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று நாதகவின் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் எக்ஸ் பக்கத்திலும் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது. இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழ் ஆசிரியர் சகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று அவர் உறுதி செய்தார். Also Read: சீமான் ஆபத்தான அரசியல் பேசுவதாக விமர்சனம் செய்துள்ளாரா இயக்குநர் வெற்றிமாறன்? Conclusion நான் முதல்வரானால் ஹெச்.ராஜாவுக்கு முக்கிய பதவி தருவேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும். நாதக தரப்பும், நியூஸ் 7 தமிழ் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Phone Conversation With Packiarajan, Spokesperson, NTK X post by NTK IT Wing, Dated January 30, 2025 Phone Conversation With Sugitha Sarangaraj, Editor, News 7 Tamil உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software