About: http://data.cimple.eu/claim-review/d9f5bcd693c984763cbddff1adbfde5256adeeed1df39c6516999e44     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: சாராய வியாபாரி ஸ்டாலின் என்று அட்டைப்படம் வெளியிட்டது ஆனந்த விகடன். Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில், ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று தலைப்பிட்டு அட்டைப்படம் ஒன்றை ஆனந்த விகடன் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா? சாராய வியாபாரி ஸ்டாலின் என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் அட்டைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேசினோம். இத்தேடலில் திருமண மண்டபங்களில் மது அருந்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டிருந்ததை விமர்சனம் செய்யும் விதமாக ‘டாஸ்மாக் வெட்ஸ் தமிழ்நாடு’ என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இப்படமானது ஏப்ரல் 23, 2023 அன்று ஜூனியர் விகடனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்தகவலை அச்சமயத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மறுத்திருத்திருந்தார். ஐபிஎல் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி என்று அவர் தெரிவித்திருந்தார். சென்ற வருடம் விகடன் வெளியிட்டிருந்த இப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட போலி படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இதனைத் தொடர்ந்து விகடனின் ஆசிரியர் பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார். Also Read: குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்றாரா ஆளுநர் ரவி? சாராய வியாபாரி ஸ்டாலின் என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றபட்டதாகும். உண்மையான படத்தில் டாஸ்மாக் வெட்ஸ் தமிழ்நாடு என்றே எழுதப்பட்டிருந்தது. சாராய வியாபாரி ஸ்டாலின் என்று எழுதப்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு தமிழக அரசு திருமண மண்டபங்களில் அனுமதி பெற்று மது அருந்தலாம் என்று வெளியிட்ட அரசாணையை விமர்சித்து விகடன் வெளியிட்டிருந்த படத்தை எடிட் செய்து கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை உரிய ஆதாரங்கள் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources X post from Junior Vikatan, Dated April 24, 2023 Phone Conversation with Britto, Editor, Vikatan (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan February 3, 2025 Vijayalakshmi Balasubramaniyan January 14, 2025 Ramkumar Kaliamurthy December 24, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software