About: http://data.cimple.eu/claim-review/da7d60085e483d99ee65cb1bdae8b94effb560a4bf776c759f40a5e0     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Claim: ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று ஒப்புக்கொண்டார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. Fact: இத்தகவல் பொய்யானது என்று ஆர்.எஸ்.பாரதி மறுத்துள்ளார். புதிய தலைமுறையும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுத்துள்ளது. “அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுககாரன் தான். கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா? Fact Check/Verification ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, அவரை நியூஸ்செக்கர் தர்ப்பிலிருந்து தொடர்புக்கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர், “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இக்கருத்தை நான் எப்போதும் தெரிவிக்கவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் புதிய தலைமுறை நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை இணையத்தளத்தில் தெளிவு செய்திருப்பதை காண முடிந்தது. இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார். Also Read: ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்றாரா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி? Conclusion ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இத்தகவல் பொய்யானது என்று ஆர்.எஸ்.பாரதி மறுத்துள்ளார். புதிய தலைமுறையும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று மறுத்துள்ளது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Our Sources Phone Conversation With R.S. Bharathi, Organizing Secretary, DMK Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai Website post by Puthiya Thlaimurai, Dated January 08, 2025 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் Authors A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software