About: http://data.cimple.eu/claim-review/dacb0ae8f4d726d89f83bb90ba8958a89f664c6f5098282de58b4936     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing. Claim: பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: 7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா? Fact Check/Verification சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு நிவேதா பெத்துராஜ் தன்னுடைய F1 கார் ரேஸ் பயிற்சியை முடித்தபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது. ”A vision to visual. Metaphorically speaking,” என்பதாக இதுகுறித்த பதிவை கடந்த ஜூலை 2021ஆம் ஆண்டு தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ். மேலும், வைரலாகும் வீடியோ “Nivetha Pethuraj Racing and Showing Her Race Car” என்ற தலைப்புடன் யூடியூப் பக்கம் ஒன்றில் கடந்த 2021ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களே தற்போது அவர் சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டதாகப் பரவி வருகின்றன. Also Read: அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா? Conclusion சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Missing Context Our Sources Instagram Post by, Nivetha Pethuraj, Dated July 11, 2021 Report By India Glitz, Dated July 14, 2021 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software