About: http://data.cimple.eu/claim-review/dc08389c457eb379b32908e721db42ab1c437b668ad9052090d2c8be     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: “நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டது. Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். 2024 பொதுத்தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்றைய முன்தினம் (ஜூன் 01) முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து பல தனியார் அமைப்புகளும், ஊடகங்ளும் எந்த கட்சி எவ்வளவு இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாதக 5 இடங்களில் வெற்றி பெறும் எனவும், பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லாமல் பூஜ்ஜிய இடங்களையே பெறும் எனவும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா? “நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட உண்மையான கருத்துக்கணிப்பு படத்தை கண்டறிய முடிந்தது. அப்படத்தில் நாதக என்கிற வார்த்தையே இடம்பெற்றிருக்கவில்லை. ‘நாதக’ என்றிருக்கும் இடத்தில் ‘பிற’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ‘பிற’ என்ற இடத்திற்கு நேராக பூஜ்ஜியம் என்றே இருந்ததேயொழிய, 5 என்று இல்லை. அதேபோல் பாஜக கூட்டணிக்கு நேராக 5 என்று இருந்தது. பூஜ்ஜியம் என்று இல்லை. இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கருத்துக்கணிப்பு படத்தையும் எடிட் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பு படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார். புதிய தலைமுறையின் இந்த நியூஸ்கார்டானது ‘ஜான் கி பாத்’ என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பை அடிப்படையாக வெளியிடப்பட்டிருந்ததால் அடுத்து அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் அந்நிறுவனம் தமிழ்நாடு குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பில் நாதகவின் பெயரே பெயரே இடம்பெற்றிருக்கவில்லை என அறிய முடிந்தது. Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா? “நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும். உண்மையில் அந்த கருத்துக்கணிப்பில் நாதகவின் பெயரே இடம்பெற்றிருக்கவில்லை. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources X’ Post from Puthiya Thalaimurai, Dated June 01, 2024 X’ Post from Jaan Ki Baat, Dated June 01, 2024 Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan February 11, 2025 Ramkumar Kaliamurthy February 10, 2025 Ramkumar Kaliamurthy January 29, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software