About: http://data.cimple.eu/claim-review/e1c16522a6ce9e91233b47d0e0c14d26e82053530b758dd3193a0655     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது பதஞ்சலி ஆயூர்வேத் நிறுவனம் ஆயூர்வேத பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. உணவுப்பொருட்கள், ஆயூர்வேத மருந்துகள், பால் பொருட்கள் என பல வகை பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. வைரலாகும் இப்படத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் லோகோவுடன் ராம்தேவ் எனும் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: ராகுல் காந்தி தங்கை மகளுடன் இருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்! பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, பதஞ்சலி ஆயூர்வேத் பீஃப் பிரியாணி மசாலாவை விற்பனை செய்கின்றதா என்பதை உறுதி செய்ய, அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அந்த மசாலா குறித்து தேடினோம். இத்தேடலில் பதஞ்சலி பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை விற்பனை செய்வதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல பதஞ்சலி பொருட்களில், ‘பதஞ்சலி’ எனும் பெயரே பிராண்ட் பெயராக (Brand name) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து ‘ராம்தேவ்’ அல்லது மற்ற பெயர்கள் பிராண்ட் பெயராக பயன்படுத்தப்படவில்லை. இதனையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடல் பாகிஸ்தான் உணவுப்பொருள் விற்பனை நிறுவனமான ‘நேஷ்னல் ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு கொண்டு சென்றது. இந்நிறுவனத்தின் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவின் படத்தையும், வைரலாகும் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரு படங்களும் ஒத்துப் போவதை நம்மால் காண முடிந்தது. வைரலாகும் படத்தில் ‘நேஷ்னல்’ என்பதை ‘ராம்தேவ்’ என மாற்றி இருப்பதையும், கூடவே பதஞ்சலி நிறுவனத்தின் லோகோ சேர்க்கப்பட்டுள்ளதையும் நம்மால் உணர முடிந்தது. மேலும் வைரலாகும் படத்தை கூர்மையாக உற்று நோக்கும்போது மசாலா பேக்கேஜின் வலப்புறத்தில் ‘SATIRE’ (பகடி) எனும் வார்த்தை இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் யாரோ வேண்டுமென்றே பதஞ்சலி நிறுவனத்தை கிண்டல் செய்யும் நோக்கத்தில் வைரலாகும் படத்தை எடிட் செய்து உருவாக்கியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. Also Read: லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி? ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக கூறி வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) Sources Official Website Of Patanjali Ayurved Official Website Of National Foods (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy January 22, 2025 Ramkumar Kaliamurthy December 16, 2024 Komal Singh October 4, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software