About: http://data.cimple.eu/claim-review/e3c60d1af1d4dcae7f9194af90266d886a52f51ff61bd545472c5eab     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு சல்யூட் அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. திமுகவும் அதன் தலைவர்களும் காலங்காலமாக கடவுள் மறுப்பு கொள்கை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் நிலையில், “தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜியருக்கு சல்யூட் அடித்த ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் காவல்துறை’’ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Also Read: என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு தமிழக காவல்துறையினர் சல்யூட் அடித்ததாக வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கடந்த 2018 ஆம் ஆண்டே இறந்து விட்டார். ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதல்வராக 2021 ஆம் ஆண்டில்தான் பொறுப்பேற்றார். ஆகவே ஸ்டாலின் ஆட்சியில் சங்கராச்சாரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டது என்பது முற்றிலும் பொய் என்பது உறுதியாகின்றது. இதனையடுத்து வைராலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையிலேயே தமிழ்நாட்டில்தான் நடந்ததா என உறுதி செய்ய வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் நிகழ்வு கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் நடைப்பெற்றது என்பதை அறிய முடிந்தது. “Guard of Honour to the Honourable God! Sringeri Periyava in Kerala!” என்று தலைப்பிட்டு பஞ்சநாதன் சுரேஷ் என்பவர் இவ்வீடியோவை அவரது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “கேரளாவிற்கு ஜெயேந்திரர் சென்றிருக்கையில் அவருக்கு காவலர்கள் மரியாதை செய்தனர். ஸ்ரிங்கேரி குருக்கள் அரசு விருந்தினர்களாக கேரள அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Also Read: இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் சல்யூட் அடித்ததாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். Sources YouTube’s Video, Published on 18th June, 2017 Article published on Hindu Tamil, Published on 1st March, 2018 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Ramkumar Kaliamurthy February 8, 2025 Ramkumar Kaliamurthy February 6, 2025 Ramkumar Kaliamurthy February 5, 2025
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software