About: http://data.cimple.eu/claim-review/e635711a987aeef79a416209f4270fa9dafe005fb4b77212dfc105a3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: விழுப்புரம் கள்ளச்சாராய மரண சம்பவத்தில் விஷச்சாரயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பி என தெரிய வந்துள்ளது. Fact: வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், “விழுப்புரம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவத்தில், மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்றவர் அப்பகுதி அதிமுக கிளைச்செயலாளர் சுந்தரமூர்த்தியின் தம்பி ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது!” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி! விழுப்புரம் கள்ளச்சாராயம் மரண சம்பவத்தில் விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பி என தெரிய வந்துள்ளதாக நியூஸ்கார்டுகள் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் நியூஸ்கார்டுகளானது ஜூனியர் விகடன் மற்றும் நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அவற்றின சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் இந்நிறுவனங்கள் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட குறித்து விசாரித்தோம். அவர் அந்த நியூஸ்கார்ட் போலியானது என பதிலளித்தார். தொடர்ந்து விகடன் ஆசிரியர் ஐ. பிரிட்டோவை தொடர்புக் கொண்டு ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார். வைரலாகும் நியூஸ்கார்டுகள் இரண்டும் போலியானவை என்று உறுதியாகிய நிலையில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் குறித்து ஆராய்ந்தோம். இதில் தமிழக அரசு வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அமரன் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்ற குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா? விழுப்புரம் கள்ளச்சாராயம் மரண சம்பவத்தில் விஷச்சாராயத்தை விற்றவர் அதிமுக கிளைச் செயலாளரின் தம்பி என தெரிய வந்துள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Our Sources Phone Conversation with I.Britto, Vikatan, Dated May 16, 2023 Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated May 16, 2023 Press release from Tamilnadu Government, Dated May 14, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Komal Singh October 4, 2024 Ramkumar Kaliamurthy August 2, 2024 Ramkumar Kaliamurthy June 30, 2023
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software