schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: இந்திய கிரிக்கெட் அணியை மாஃபியா என வர்ணித்து உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்
Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். ரிக்கி பாண்டிங் அப்படி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இந்திய கிரிக்கெட் அணியை மாஃபியா என வர்ணித்து உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் .. பணத்திற்காக ஐபிஎல் மேட்ச் நடத்தி இந்த கெட்டப் பெயரை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளது” என்று இந்த செய்தியை பலரும் பரப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!
ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
Fox Sports நேர்காணலில் ரிக்கி பாண்டிங் இவ்வாறு கூறியதாக பரவி வரும் நிலையில் கீ-வேர்டுகள் மூலமாக அதுகுறித்து தேடினோம். அப்போது, நவம்பர் 20, 2023 அன்று “Ricky Ponting, Michael Vaughan and Nasser Hussain call out India for tactical pitch ‘backfire” என்கிற தலைப்பில் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்திரேலியாவின் வெற்றி குறித்த கருத்துக்களைப் பதிவிட்டிருந்தது.
குறிப்பிட்ட கட்டுரையில் “Aussie cricket icon Ricky Ponting said the pitch prepared “backfired on India”. என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் மாபியா என்று கூறியதாக எங்கும் இடம்பெறவில்லை.
Fox News-ன் சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த பதிவுகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும், ரிக்கி பாண்டிங்கின் சமூக வலைத்தளப்பக்கத்திலும் அவர் அவ்வாறு கூறியதாக எந்த பதிவும் இடம்பெறவில்லை.
தி ஸ்டேட்ஸ்மேன் செய்தி இதழின் விளையாட்டுப்பிரிவு ஆசிரியர் Tridib Baparnash-ஐ தொடர்பு கொண்டு நியூஸ்செக்கர் தரப்பில் பேசியபோது அவர் ரிக்கி பாண்டிங் பெயரில் பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தார்.
Also Read: தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources:
1. Report published by Fox Sports, dated 20 November, 2023
2. Telephonic conversation with Sports Editor of The Statesman
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 22, 2023
Ramkumar Kaliamurthy
November 22, 2023
Ramkumar Kaliamurthy
November 21, 2023
|