schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ்
Fact: வைரலாகும் படத்தில் இருப்பவர் நடிகை சோனாலி பிந்த்ரே
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன உலகப்புகழ்பெற்ற டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸின் கடைசி வார்த்தைகள் என்று கூறி பதிவு ஒன்று தற்சமயம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்பதிவில் இருந்ததாவது,
மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை...
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்....
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை...ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது பிரார்த்தனைகளும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்பதிவின் கூடவே மொட்டைத் தலையுடன் ஒரு பெண்ணின் புகைப்படமும் இணைக்கப்பட்டு, அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று கூறப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனரா?
சமூக வலைத்தளங்களில் புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் கடைசியாக எழுதிய வார்த்தைகள்” என்று கூறி, கூடவே ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து பதிவு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் பதிவில் இருக்கும் பெண் பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே என அறிய முடிந்தது. இவர் தமிழில் காதலர் தினம், பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவராவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் பதிவுடன் பகிரப்படும் படத்தை பதிவிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து கிர்சாய்தா என்பவர் குறித்து தேடினோம். இத்தேடலில் கிர்சாய்தா ஒரு புகழ்ப்பெற்ற ஃபேஷன் டிசைனர் என்றும், இவரை ஏறக்குறைய 4.6 இலட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
இவர் புற்று நோயால் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துள்ளார். இதுக்குறித்து இன்சைட் எடிஷன் எனும் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் சிகிச்சையின்போது இவர் பேசிய வீடியோ நமக்கு கிடைத்தது.
இந்த வீடியோவில், “என்னிடம் விலையுயர்ந்த கார் இருக்கின்றது. அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை. என்னிடம் நல்ல வீடு இருக்கின்றது. அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் விமானத்தில் பறக்கலாம். அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை. ஆகையால் உங்களிடம் இல்லாத ஒரு விஷயத்துக்காக வருத்தப்படாதீர்கள். உங்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியடையுங்கள். உங்களிடம் என்ன மாதிரியான சோபாக்கள் இருக்கின்றது என்பது யாருக்கு அவசியம்? இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அன்பு. கடைசியாக உங்களிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே முக்கியமான சிறந்த பரிசு’ என்று கிர்சாய்தா பேசியுள்ளதை காண முடிகின்றது.
இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் பதிவில் காணப்படும் விஷயங்கள் சற்று மிகைப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும் கிர்சாய்தா கூறிய விஷயங்களுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண முடிகின்றது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், கிர்சாய்தாவின் கடைசி வார்த்தைகள் என்று பரவும் பதிவு உண்மையானதே. ஆனால் அப்பதிவில் இருக்கும் பெண் கிர்சாய்தா அல்ல, அவர் நடிகை சோனாலி பிந்த்ரே ஆவார்.
Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?
புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் படமானது உண்மையில் நடிகை சோனாலி பிந்த்ரேவின் படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram post from Sonali Bindre, dated June 06, 2021
Kirzayda Rodriguez Instagram profile
Report from Inside Edition, dated September 11, 2018
YouTube video from Y&M Jenx Vlog, dated October 07, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|