About: http://data.cimple.eu/claim-review/faa24c3f2075ef42acbdbb830904bfebf86a049ab0dee4d6fdfd51f8     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing. கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர் பெயர் பிரபாகரன் என்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”கிருஷ்ணகிரியில் இந்திய ராணுவ வீரர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர்!ராணுவ வீரருக்கு பாதுகாப்பில்லை! பெண் போலீசாருக்கு பாதுகாப்பில்லை! பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை! மௌனமாக தமிழக ஊடகங்கள்!திமுகவினரின் அராஜகம் குறித்து விவாதிக்காத அவல நிலை!” என்பதாக இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவிட்டிருந்தார். அவரைப் போலவே, பலரும் சமூக வலைத்தளங்களில் உயிரிழந்த ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்பதாகப் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை! Fact Check / Verification கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன? பிப்ரவரி 8ஆம் தேதியன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் கிராமத்தின் தண்ணீர் தொட்டியில் துணி துவைப்பது குறித்து இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், உள்ளூர் நபர்களால் தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வீரர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே, இச்சம்பவம் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் அரசியல் ரீதியாக பதிவிட்ட நிலையில், உண்மை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. மேலும், இதுகுறித்த தவறான தகவல்களை பரப்புவதும், உறவினர்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறு கட்சி சார்ந்து பார்க்கப்படுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலான செயல் என்றும் தெரிவித்துள்ளது காவல்துறை. இந்நிலையில், காவல்துறையின் தரப்பிலேயே உயிரிழந்த ராணுவ வீரர் பெயர் பிரபு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர் பிரபு உயிரிழந்ததை, அவரது சகோதரர் பிரபாகரன் உயிரிழந்ததாக தவறுதலாகப் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் நமக்குத் தெரிய வந்தது. Also Read: துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன? Conclusion கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரரின் பெயர் பிரபாகரன் என்று பரவும் தகவல் தவறானது என்பது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Partly False Sources Twitter Post From, Krishnagiri District Police, Dated February 16, 2023 Twitter Post From, Tamil Nadu Police, Dated February 15, 2023 YouTube Video From, News 18 Tamil Nadu, Dated February 16, 2023 உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software